400+ ரன்கள் அடித்திருந்தால் இன்னும் மாஸா இருந்துருக்கும் ;பிரித்வி ஷாவின் முச்சதம் குறித்து பேசிய முன்னாள் வீரர் ..
இப்ப இருக்குற நிலமைக்கு பிரித்வி ஷா செஞ்ச சம்பவம் தான் தேவை என இந்திய அணியின் முன்னாள் ஜாம்பவான் சுனில் கவாஸ்கர் தெரிவித்துள்ளார்.
நடைபெற்றுக் கொண்டிருக்கும் ரஞ்சிக்கோப்பையில் மும்பை அணிக்காக விளையாடி வரும் இந்திய அணியின் இளம் வீரர் பிரித்வி ஷா.,அசாம் அணிக்கு எதிராக 379 ரன்கள் அடித்ததன் மூலம் மீண்டும் இந்திய அணியின் கவனத்தை தன் பக்கம் திருப்பியுள்ளார்.
19 வயதுக்குட்பட்ட உலகக் கோப்பை தொடரின் கேப்டனாக செயல்பட்டு மிகச் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி, தன்னுடைய 19 வயதிலேயே சர்வதேச இந்திய அணிக்காக டெஸ்ட் தொடரில் அறிமுகமாகிய பிரித்வி ஷா, அதற்குப் பின் நடைபெற்ற ஐபிஎல் தொடர் உள்ளூர் தொடர் என அனைத்திலும் சிறப்பாக செயல்பட்டார்.இதனால் இவருக்கு இந்திய அணியில் வாய்ப்பு கிடைத்தது. ஆனால் போகப் போக இவருக்கு ஏற்பட்ட காயம் மற்றும் மோசமான பார்ம் காரணமாக இவரை இந்திய அணி முற்றிலுமாக ஓரம் கட்டியது.
அப்படியிருந்தும் தன்னுடைய கடுமையான பயிற்சி மூலம் மீண்டும் வந்த ப்ரித்வி ஷா, சையத் முப்தாக் அலி போட்டி, விஜய் ஹசாரே போட்டி, ரஞ்சி கோப்பை ஆகிய அனைத்து மிக சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தியும் இந்திய அணி இவரை கண்டுகொள்ளாமலே இருந்தது.
இந்த சமயத்தில் ரஞ்சிக்கோப்பையில் அதிரடியாக விளையாடி முச்சதம் அடித்து மீண்டும் ஒருமுறை இந்திய கிரிக்கெட் வட்டத்தில் பேசுபொருளாக பிரித்விஷா திகழ்ந்திருக்கிறார்.
இந்த நிலையில் அசாம் அணிக்கு எதிரான ரஞ்சிக்கோப்பையில் முச்சதம் அடித்த பிரத்விஷாவிற்கு முன்னாள் கிரிக்கெட் வீரர்கள் மற்றும் கிரிக்கெட் வல்லுனர்கள் பாராட்டுகளை தெரிவித்து வருவதோடு அவரை மீண்டும் டெஸ்ட் தொடருக்கான இந்திய அணியில் சேர்த்துக் கொள்ள வேண்டும் எனவும் கோரிக்கை வைத்து வருகின்றனர்.
அந்த வகையில், வளர்ந்து வரும் இளம் வீரர்களுக்கு எப்பொழுதும் தன்னுடைய ஆதரவான கருத்துக்களை தெரியப்படுத்தி வரும் இந்திய அணியின் முன்னாள் ஜாம்பவான் சுனில் கவாஸ்கர்., ப்ரித்வி ஷாவின் அதிரடி ஆட்டம் நிச்சயம் மீண்டும் இந்திய அணி இடம் பெறுவதற்கு வாய்ப்பை ஏற்படுத்தும் என ஆதரவாக பேசிள்ளார்.
இதுகுறித்து சுனில் கவாஸ்கர் பேசுகையில்,“இந்த சமயத்தில் இந்த முச்சதம் என்பது பிரித்வி ஷாவிற்கு மிகவும் தேவையான ஒன்றாகும். அந்த இளம் வீரர் 60-70 ரன்களை அற்புதமாக அடிக்கிறார். ஆனால் அதிகமான நபர்கள் அதே ,60-70 ரன்கள் அடிப்பார்கள். உண்மையில் உங்களில் யாரேனும் தேர்வு குழுவை தங்கள் பக்கம் திருப்ப வேண்டும் என நினைத்தால் இது போன்ற அதிரடி ஆட்டம் தான் தேவை. சதம் அல்லது இரட்டைச் சதம் அல்லது முச்சதம் போன்ற அதிரடியான ஆட்டத்தை வெளிப்படுத்த வேண்டும். பிரித்வி ஷா கிட்டத்தட்ட 400 ரன்கள் எட்டி விட்டார் அவர் மட்டும் 400+ அதிகமான ரன்களை எடுத்திருந்தால் இன்னும் சிறப்பாக இருந்திருக்கும்” என்று சுனில் கவாஸ்கர் பிரித்விஷா குறித்து பேசியிருந்தது குறிப்பிடத்தக்கது.