இந்த அணி தான் உலகக்கோப்பையை வெல்லும் – ஆஸ்திரேலியா கேப்டன் பின்ச்!!

2019ஆம் ஆண்டுக்கான உலகக்கோப்பையை இந்த அணி தான் நிச்சயம் வெல்லப்போகிறது என கருத்து தெரிவித்துள்ளார்.

ஆஸ்திரேலிய வீரர் ஆரோன் பிஞ்ச் மற்றும் பயிற்சியாளர் ஜஸ்டின் லேன்ஜர் ஆகியோர் பத்திரிக்கையாளர்களுக்கு பேட்டியளித்தார்கள். ஒரு மாதத்தில் ஆஸ்திரேலிய அணி அடுத்தடுத்த தொடர்களில் வெற்றி பெற்றது. இது உலககோப்பைக்கு முன்பாக நம்பிக்கையாக இருந்தது என குறிப்பிட்டனர்.

ஆஸ்திரேலியா 2-0 என்ற கணக்கில் டி 20 தொடரில் என இந்தியாவை வென்றது. அதை தொடர்ந்து 3-2 என ஒருநாள் தொடரையும் வென்றது. டெஸ்ட் மற்றும் ஒருநாள் தொடரை இந்தியா கடந்த ஆண்டு இறுதியில் இழந்த பின்னர்,  2019 ஆம் ஆண்டு முதல் பகுதியை சொந்த மண்ணில் தோல்வியுடன் துவங்கியிருக்கிறது.

ADELAIDE, AUSTRALIA – JANUARY 15: Aaron Finch of Australia walks from the field after being dismissed during game two of the One Day International series between Australia and India at Adelaide Oval on January 15, 2019 in Adelaide, Australia. (Photo by Daniel Kalisz/Getty Images)

“இது நம்பமுடியாதது, நாங்கள் காட்டிய தாக்கம் மற்றும் போராட்டம் நம்பமுடியாதது, இப்போது சிறிது காலத்திற்கு நாங்கள் பழைய நிலைக்கு திரும்பியிருக்கிறோம், ஆனால் திரும்பி வந்ததற்கு அணியுடன் நான் மிகவும் பெருமைப்படுகிறேன்,” என்று பின்ச் கூறினார். எங்கள் மீது வைத்த விமர்சனத்தை தவறென நிரூபித்துளோம்.

Australia’s captain Aaron Finch raises his bat on reaching his century during the third match played between Australia and hosts Zimbabwe as part of a T20 tri-series which includes Pakistan at Harare Sports Club, on July 3, 2018. / AFP PHOTO / Jekesai NJIKIZANA

“நான் கூறியதுபோல்,எண்களின் மீதான தவறான விமர்சனம் தற்போது மிகவும் குறைந்துள்ளது, இதே நம்பிக்கையுடன் நாங்கள் தொடர்ந்து செயல்பட்டால், உலகக் கோப்பையை எங்களால் வெல்ல முடியும். இது எங்களை நாங்கள் நம்புவதற்கான தருணம். நாக்பூரில் நாங்கள் மீண்டு வந்தது தான் பெரும் வெற்றியை அளித்தது. தற்போது தொடர் எங்களிடம். உலகக்கோப்பையும் இதேபோல வெல்லுவோம்.

பயிற்சியாளர் ஜஸ்டின் லாங்கர் கூறியதாவது: “வெற்றிக்கான அனைத்தும் அவர்களையே சேரும், தற்போது அணி வீரர்களை பற்றி பெருமிதம் கொள்கிறேன், இந்தியாவில் ஆஸ்திரேலியா வென்றது அவர்களால் நம்பமுடியாத ஒன்று தான்.”

Prabhu Soundar:

This website uses cookies.