இந்த இந்திய அணி வெளிநாட்டில் சாதிக்கும் : ரவி சாஸ்திரி நம்பிக்கை

இலங்கை அணியுடனான டி20 தொடர் முடிந்தவுடன் இந்திய அணி வரும் 28ஆம் தேதி தென்னாப்பிரிக்கா சுற்றுப்பயணம் செய்யஉள்ளது. இதற்கான இந்திய அணி சமீபத்தில் அறிவிக்கப்பட்டது. இந்த அணியில் சரிசமாக அனைத்து வீரர்களும் இருந்தனர். மூன்று டெஸ்ட் போட்டிக்காக 17 பேர் கொண்ட அணியில் 5 வேகப்பந்து சிறந்த வீச்சாளர்கள், ஒரு வேகப்பந்து வீச்சு ஆல் ரவுண்டர், இரண்டு ஸ்பின் ஸ்பெஷலிஸ்ட், 2 விக்கெட் கீப்பர் மீதம் பேட்ஸ்மேன்கள் என அறிவித்தது. இந்த அணி குறித்து பல முன்னாள் வீர்ரகள் தங்களது நல்ல விமர்சனங்களை முன் வைத்தனர். மேலும், இந்த அணியை வைத்து இந்த முறை தென்னாப்பிரிக்க அணியியை வீழ்த்திவிடலாம் என முன்னாக வீரர்கள், ராகுல் டிராவிட், சுனில் கவாஸ்கர் ஆகியோர் தெரிவித்தனர்.

தற்போது இது குறித்து பயிச்சியாளர் ரவி சாஸ்திரி கூறியுள்ளார்.

அந்நிய மண்ணில் சாதிக்க கேப்டன் விராட் கோலி தலைமையிலான இந்திய அணி தாகத்துடன் உள்ளதாக பயிற்சியாளர் ரவிசாஸ்திரி கூறியுள்ளார்.

இந்திய கிரிக்கெட் அணி இதுவரை 9 டெஸ்ட் தொடர்களை தொடர்ச்சியாக வென்றுள்ளது. ஆனால் அதில் 6 போட்டிகள் இந்திய மண்ணில் விளையாடியவை. ஒரே ஒரு தொடர்தான் ஆசிய நாட்டிற்கு வெளியே வெஸ்ட் இண்டீஸில் வென்றது. இதனால், இந்திய அணி உள்நாட்டில் வெற்றிகளை குவிப்பது போல், வெளிநாட்டு மண்ணில் வெற்றி பெறுவதில்லை என்ற விமர்சனம் தொடர்ந்து வருகிறது.

இந்நிலையில், ஜனவரி மாதம் முதல் இந்திய கிரிக்கெட் அணி தென் ஆப்பிரிக்காவில் சுற்றுப் பயணம் மேற்கொள்ள உள்ளது. தென் ஆப்பிரிக்கா அணியுடன் 3 டெஸ்ட், 6 ஒருநாள், 3 டி20 போட்டிகளில் விளையாடுகிறது. ஜனவரி 5-ம் தேதி முதல் டெஸ்ட் போட்டி தொடங்குகிறது. இதனையடுத்து ஆஸ்திரேலியா மற்றும் இங்கிலாந்தில் இந்திய அணி சுற்றுப் பயணம் மேற்கொள்கிறது.

இந்திய அணி மீதான விமர்சனம் குறித்து பேசிய தலைமை பயிற்சியாளர் ரவி சாஸ்திரி, வெளிநாட்டு மண்ணில் அதிக வெற்றிகளை பெற்றதில்லை என்ற வரலாற்றை மாற்ற கோலி தலைமையிலான இந்திய அணி வீரியத்தோடு விளையாட இருப்பதாக தெரிவித்தார்.

மேலும் அவர், “தற்போதையை இந்திய அணி சிறப்பாக விளையாடி வருகிறது. சொந்த மற்றும் அந்நிய மண்ணில் தங்களை நிரூபிக்க கோலி மற்றும் வீரர்கள் தயாராக உள்ளனர். உள்நாடு, வெளிநாடு என்று பிரித்து பார்க்கத் தேவையில்லை. வெற்றி பெறாமல் போவதற்கு பல்வேறு காரணங்கள் உள்ளன. கொல்கத்தாவில் ஒரு டெஸ்ட் போட்டியில் விளையாடினால் அடுத்த முறை அதே மைதானத்தில் இரண்டு அல்லது மூன்று வருடங்கள் ஆகும். இதே நிலைதான் வெளிநாட்டு மைதானங்களுக்கும் பொறுந்தும்” என்றார்.

 

சுற்றுப்பயண அட்டவணை 

டெஸ்ட் தொடர் அட்டவணை

  1. முதல் டெஸ்ட் – ஜனவரி 5ஆம் தேதி முதல் 9ஆம் தேதி வரை , கேப் டவுன் 
  2. 2ஆவது டெஸ்ட் – ஜனவரி 13ஆம் தேதி முதல் 17 ஆம் தேதி வரை, செஞ்ஜூரியன்
  3. 3ஆவது டெஸ்ட் – ஜனவரி 24ஆம் தேதி முதல் 28ஆம் தேதி வரை, ஜோகனஸ்பர்க்

ஒருநாள் தொடர் அட்டவணை

  1. முதல் ஒருநாள் போட்டி – பிப்.1, டர்பன்
  2. 2ஆவது ஒருநாள் போட்டி – பிப்.4, செஞ்சூரியன்
  3. 3ஆவது ஒருநாள் போட்டி – பிப்.7, கேப் டவுன்
  4. 4ஆவது ஒருநாள் போட்டி – பிப்.10, ஜோகனஸ்பர்க்
  5. 5ஆவது ஒருநாள் போட்டி – பிப்.13, போர்ட் எலிசபத்
  6. 6ஆவது ஒருநாள் போட்டி – பிப்.16, செஞ்சூரியன்

டி20 தொடர் அட்டவணை

  1. முதல் டி20 போட்டி – பிப்.18, ஜோகனஸ்பர்க்
  2. 2ஆவது டி20 போட்டி – பிப்.21, செஞ்சூரியன்
  3. 3ஆவது டி20 போட்டி – பிப்.24, கேப் டவுன்

Editor:

This website uses cookies.