உங்களுக்கு உலகக்கோப்பைய வென்று கொடுக்க போறதே இந்த பையன் தான்… ரிக்கி பாண்டிங் உறுதி !!

நான் தேர்வாளராக இருந்தால் நிச்சயம் எதிர்வரும் உலகக் கோப்பை தொடருக்கான ஆஸ்திரேலிய அணியில் டிம் டேவிட்டை சேர்த்துக்கொள்வன் என்று ரிக்கி பாண்டிங் தெரிவித்துள்ளார்.

ஆஸ்திரேலியாவில் நடைபெறும் 2022 உலகக்கோப்பை தொடர் நெருங்க நெருங்க உலகக் கோப்பை தொடருக்கான தயாரிப்பும் ஒவ்வொரு அணியிலும் அரங்கேறிக் கொண்டு வருகிறது.

ஒவ்வொரு அணியும், பல்வேறு விதமான தொடர்களில் தங்களது வீரர்களை ஈடுபடுத்தி சிறப்பாக செயல்படும் வீரர்களை கவனித்து வருகின்றனர்.

குறிப்பாக இந்தியா, ஆஸ்திரேலியா இங்கிலாந்து போன்ற அணிகளில் திறமையான வீரர்களின் எண்ணிக்கை அதிகமாக இருப்பதால் எந்த வீரரை அணியில் இணைத்துக் கொள்ளலாம் எந்த வீரரை நீக்கலாம் என்று அணித் தேர்வாளர்கள் பெருத்த சந்தேகத்தில் தவித்து வருகின்றனர்.

அவர்கள் தெளிவாக யோசித்து அணியை தேர்ந்தெடுக்கும் வகையில் முன்னாள் வீரர்கள் மற்றும் கிரிக்கெட் வல்லுனர்கள் தங்களுடைய உயர்வான ஆலோசனைகளையும் கருத்துகளையும் தெரியப்படுத்தி வருகின்றனர்.

அந்த வகையில் ஆஸ்திரேலிய அணியின் முன்னாள் கேப்டன் ரிக்கி பாண்டிங் ஆஸ்திரேலியா அணியில் டிம் டேவிட்டை தேர்ந்தெடுப்பது அணிக்கு அதிக பலத்தை ஏற்படுத்தும் என்று செய்தியாளர்கள் சந்திப்பில் வாயிலாக தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து அவர் பேசுகையில்,“டிம் டேவிட் உலகக் கோப்பை தொடரை வென்று கொடுக்கும் திறமையான வீரர்களில் ஒருவராக உள்ளார், சாதாரணமாக ரன்குவிக்கும் ஒரு வீரராக அவரை நான் அணியில் எடுக்க பரிந்துரைக்கவில்லை, மாறாக 2003இல் ஆஸ்திரேலியா அணியின் வெற்றிக்கு ஆண்ட்ரூ சைமன்ஸ் எவ்வாறு சிறப்பாக செயல்பட்டார் என்பது நமக்கு தெரியும், டிம் டேவிட் அவரை எனக்கு நியாபக படுத்துகிறார். நீங்கள் அவரை அணியில் இணைத்தால் இந்த தொடரில் வெற்றி பெறுவதற்கு அதிகப்படியான வாய்ப்புகள் உள்ளது.அவரை அப்படிதான் நான் பார்க்கிறேன், மிடில் ஆர்டரில் சிறப்பாக செயல்படக்கூடிய பல வீரர்கள் ஆஸ்திரேலியாவில் உள்ளனர்.ஆனால் டிம் டேவிட் அணியில் இருந்தால் கூடுதல் சிறப்பாக இருக்கும் கடந்த இரண்டு வருடங்களில் இவர் சிறப்பாக செயல்படுகிறார் என்று ரிக்கி பாண்டிங் பேசியிருந்தது குறிப்பிடத்தக்கது.

Mohamed:

This website uses cookies.