வெறித்தனமா விளையாடுறான்.. இந்த பையனுக்கு கண்டிப்பா ஆஸ்திரேலிய அணியில் இடம் கிடைக்கும்; ஆரோன் பின்ச் உறுதி !!

கூடிய விரைவில் அதிரடி வீரர் டிம் டேவிட்டிர்க்கு ஆஸ்திரேலியா அணியில் இடம் கிடைக்கும் என்று ஆஸ்திரேலிய அணியின் கேப்டன் ஆரோன் பின்ச் தெரிவித்துள்ளார்.

2022 ஐபிஎல் தொடரில் 8.25 கோடிக்கு மும்பை இந்தியன்ஸ் அணியில் ஒப்பந்தம் செய்யப்பட்ட  டிம் டேவிட்டை மும்பை இந்தியன்ஸ் அணி முதல்பாதியில் இரண்டு போட்டிகளில் மட்டுமே விளையாட வைத்தது.

வாய்ப்பு கொடுக்காமல் வெளியில் உட்கார வைக்க தான் இந்த வீரரை  தேவையில்லாமல் இவ்வளவு கோடி கொடுத்து அணியில் இணைத்தீர்களா என்று பெரும்பாலான முன்னாள் வீரர்கள் மும்பை அணியை விமர்சித்த நிலையில் இரண்டாம் பாதியில் மும்பை அணி டிம் டேவிட்டை விளையாடுவதற்கு வாய்ப்பளித்தது.

இந்த வாய்ப்பை சரியாகப் பயன்படுத்திக் கொண்ட  டேவிட்,மிகவும் அதிரடியாக விளையாடி தன்னுடைய திறமையை நிரூபித்தார். இப்படிப்பட்ட ஒரு வீரரயா நாம் உட்கார வைத்தோம் என்று மும்பை அணி வருத்தப்படும் வகையில் இவருடைய ஆட்டம் மிகவும் பிரமாதமாக இருந்தது.

மேலும் இவருடைய சிறப்பான ஆட்டத்தால் நிச்சயம் இவர் ஆஸ்திரேலிய அணியில் இடம் பெற்று விடுவார் என்று எதிர்பார்த்த நிலையில், அடுத்த மாதம் நடைபெறவிருக்கும் இலங்கை அணிக்கு எதிரான டி20 தொடரில் இவருடைய பெயர் ஆஸ்திரேலிய அணியில் இடம்பெறவில்லை.

நல்ல பார்மில் இருக்கும் இவரை ஏன் ஆஸ்திரேலிய அணி தனது அணியில் இணைக்கவில்லை என்று முன்னாள் வீரர்கள் மற்றும் கிரிக்கெட் வல்லுனர்கள் கேள்வி எழுப்பிய நிலையில் ஆஸ்திரேலிய அணியின் கேப்டன் ஆரோன் பின்ஞ், டிம் டேவிட் அணியில் இடம் பெறாதது குறித்து செய்தியாளர்கள் சந்திப்பில் விளக்கம் அளித்துள்ளார்.

இதுகுறித்து அவர் பேசுகையில், “டேவிட்டிற்கு கூடிய விரைவில் ஆஸ்திரேலிய அணியில் இடம் கிடைத்துவிடும், தற்பொழுது சிறந்த பார்மில் இருக்கும் இவர் தன்னுடைய திறமையை இந்த ஐபிஎல் தொடர் மூலம் வெளி உலகத்திற்கு தெரியப்படுத்தி விட்டார், டேவிட் ஒரு அதிரடியான வீரர், முதல் பந்திலிருந்து அதிரடியாக விளையாடுவது என்பது மிகவும் அரிதான திறமையாகும், ஆனால் அதை இவர் பலமுறை நிகழ்த்தி காட்டியுள்ளார். நிலையாக விளையாடி வரும் இவருக்கு கூடிய விரைவில் ஆஸ்திரேலிய அணியில் விளையாடுவதற்கு இடம் கிடைக்கும் ” என்று ஆரோன  பின்ஞ் பேசியிருந்தது குறிப்பிடத்தக்கது.

Mohamed:

This website uses cookies.