இந்திய அணியை பழி தீர்ப்போம்; எச்சரிக்கும் ஆஸ்திரேலிய கேப்டன் !!

இந்திய அணியை பழி தீர்ப்போம்; எச்சரிக்கும் ஆஸ்திரேலிய கேப்டன்

கடந்த 2018/19 ஆம் ஆண்டில் இந்திய அணி ஆஸ்திரேலியா சென்ற போது 4 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் பங்கேற்றது. அதை இந்திய அணி 2-1 என கைப்பற்றி அசத்தியது. இதன் மூலம் ஆஸ்திரேலிய மண்ணில் நடந்த டெஸ்ட் தொடரை இந்திய அணி முதல் முறையாக கைப்பற்றியது.

ஆனால் அந்த தொடரில் தடை காரணமாக ஆஸ்திரேலிய கிரிக்கெட் அணியின் நட்சத்திர வீரர்களான ஸ்டீவ் ஸ்மித், டேவிட் வார்னர் ஆகியோர் இடம் பெறவில்லை. இந்நிலையில் இம்முறை இந்திய அணி ஆஸ்திரேலியா சுற்றுப்பயணம் செல்வது குறித்து அந்த அணியின் கேப்டன் டிம் பெய்ன் கருத்து தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து பெய்ன் கூறுகையில், “இரு தரமான அணிகள் மோதும் தொடர் என்பதால் மிகவும் பரபரப்பான தொடராக இருக்கும். ஏன் என்றால் கிரிக்கெட்டின் தரமே முன்பு என்ன நடந்தது என்பதை பொறுத்து கிடையாது. இந்தியா, ஆஸ்திரேலியா மோதும் தொடர் ஒரு மினி ஆஷஸ் கிரிக்கெட் தொடர் போன்றது.

முன்பு நடந்ததை திரும்பிப் பார்த்து அதற்கு பழிக்கு பழி தீர்க்கும் நோக்கம் இல்லை. 15,000 ரன்கள் சேர்த்த இருவரான ஸ்டீவ் ஸ்மித், டேவிட் வார்னர் ஆகியோர் அணிக்கு திரும்பியது. லபுஷேனின் ஆட்டம் சிறப்பாக உள்ளது. அதனால் இம்முறை ஆட்டமே வேறுவிதமாக இருக்கும். இந்திய பவுலிங் எப்படி இருக்கும் என தெரியும். ஆனால் இம்முறை டாப்-6 பேட்ஸ்மேன்களில் மூன்று மிகச் சிறந்த பேட்ஸ்மேன்கள் உள்ளனர்” என்றார்.

Mohamed:

This website uses cookies.