பாலியல் குற்றச்சாட்டில் சிக்கிய டிம் பெய்ன்; கேப்டன் பதவியில் இருந்து விலகல் !!

ஆஸ்திரேலிய அணியின் கேப்டன் டிம் பெய்ன் கேப்டன் பதவியிலிருந்து ராஜினாமா செய்வதாக அறிவித்துள்ளார்.

2018ஆம் ஆண்டு நடைபெற்ற சவுத் ஆப்பிரிக்கா அணிக்கு எதிரான டெஸ்ட் போட்டியில் பந்தை சேதப்படுத்திய ச குற்றத்திற்காக ஆஸ்திரேலிய அணியின் டெஸ்ட் தொடர் கேப்டனாக இருந்த ஸ்டீவ் ஸ்மித் மற்றும் சக வீரர் டேவிட் வார்னர் போன்ற வீரர்கள் தண்டிக்கப்பட்டு சஸ்பெண்ட் செய்யப்பட்டனர், இதன் காரணமாக ஆஸ்திரேலியா அணியின் டெஸ்ட் தொடர் கேப்டனாக அந்த அணியின் விக்கெட் கீப்பர் பேட்ஸ்மேன் டிம் பெய்ன் கேப்டன் பொறுப்பில் அமர்த்தப்பட்டார்.

டிம் பெய்ன் பொறுப்பேற்ற பின் ஆஸ்திரேலிய அணி பல டெஸ்ட் போட்டிகளில் வெற்றி பெற்று சாதனை படைத்தது, இருந்தபோதும் 2018 ஆம் ஆண்டு ஆஸ்திரேலியா அணியின் கேப்டன் டிம் பெய்ன் பாலியல் அத்துமீறல் செய்கிறார் என்று டாஸ்மேனியா பெண் ஒருவர் ஆஸ்திரேலிய கிரிக்கெட் நிர்வாகத்திடம் புகார் ஒன்றை அளித்தார், அதில் ஆஸ்திரேலியா அணியின் கேப்டன் டிம் பெய்ன் எனக்கு ஆபாசமான செய்திகளையும் படங்களையும் அனுப்பி தொந்ததரவு தருகிறார் என்று கூறியிருந்தார்.

அப்பொழுது அவர் மீது இந்த குற்றச்சாட்டு நிரூபிக்கப்படாமல் மௌனமாக மூடி மறைக்கப்பட்டது, ஆனால் தற்பொழுது இங்கிலாந்துக்கு எதிரான ஆஷஸ் தொடருக்கு தயாராகிக் கொண்டிருக்கும் நிலையில் ஆஸ்திரேலிய அணியின் கேப்டன் டிம் பெய்ன் மீது மீண்டும் அந்த குற்றச்சாட்டு சம்பந்தமாக அழுத்தம் அதிகரிக்க தொடங்கி விட்டது, இதன் காரணமாக டிம் பெய்ன் டெஸ்ட் தொடர் கேப்டன் பதவியிலிருந்து ராஜினாமா செய்வதாக அறிவித்து விட்டார்.

இந்நிலையில் தனது கேப்டன் பதவியை ராஜினாமா செய்வது குறித்து பத்திரிகையாளர்கள் சந்திப்பின்போது பேசிய அவர், இன்றுடன் நான் டெஸ்ட் தொடர் கேப்டன் பதவியில் இருந்து விலகி விடுகிறேன் அதுதான் எனக்கும் எனது குடும்பத்திற்கும் நல்ல முடிவாக இருக்கும், நான் முன்பு செய்த தவறை நினைத்து மிகவும் வருத்தப் பட்டுக் கொண்டிருக்கிறேன் குறிப்பாக என்னுடைய குடும்பத்தாரிடம் பலமுறை மன்னிப்பு கேட்டுள்ளேன் அவர்களும் என்னை மன்னித்து எனக்கு ஆதரவாக உள்ளனர்.

கடந்த மூன்று ஆண்டுகளுக்கு முன் செய்த தவறு தற்பொழுது மக்கள் மத்தியில் பேசுபொருள் ஆகிவிட்டது,இதற்காக நான் எனது மனைவி எனது குடும்பம் மற்றும் பாதிக்கப்பட்ட நபரிடமும் பகிரங்கமாக மன்னிப்பு கேட்கிறேன், மேலும் நான் செய்த செயலால் கிரிக்கெட்டிற்கு அவப்பெயர் ஏற்பட்டு இருந்தால் அதற்காக நான் மன்னிப்பு கேட்டுக் கொள்கிறேன் என்று டிம் பெய்ன் அதில் தெரிவித்திருந்தார். டிபைன் கேப்டன் பதவியிலிருந்து ராஜினாமா செய்தாலும் ஒரு வீரராக ஆஸ்திரேலிய அணியில் பயணிப்பார் என்று ஆஸ்திரேலிய கிரிக்கெட் நிர்வாகம் தெரிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது.

 

Mohamed:

This website uses cookies.