சப்ப டீம் கூட ஓகே.. எங்க கூட ‘டே-நைட் டெஸ்ட்’ ஆட ஓகே சொல்வாரா கோஹ்லி? – வம்புக்கு இழுக்கும் ஆஸ்திரேலியா கேப்டன்!

கத்துக்குட்டி அணியிடம் பகலிரவு டெஸ்ட் போட்டியில் வென்று விட்டார்கள். எங்களிடம் ஆட தைரியம் இருக்கிறதா விராட் கோலிக்கு? என்ற பாணியில் கோலியை வம்புக்கு இழுத்துள்ளார் ஆஸ்திரேலிய அணியின் கேப்டன் டிம் பெயின்.

வங்கதேச அணிக்கு எதிரான தொடரின் இரண்டாவது டெஸ்ட் போட்டி கொல்கத்தாவில் உள்ள ஈடன் கார்டன் மைதானத்தில் வரலாற்று சிறப்புமிக்க பகலிரவு டெஸ்ட் போட்டியாக நடத்தப்பட்டது. இதில் இந்திய அணி வேகப்பந்து வீச்சில் மிரட்டி, இன்னிங்ஸ் மற்றும் 46 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றியை பெற்றது.

பிசிசிஐ தலைவராக பொறுப்பேற்ற பிறகு இதுபோன்ற (பகலிரவு டெஸ்ட் போட்டி) முடிவை அதிரடியாக எடுத்த சவுரவ் கங்குலிக்கு முன்னதாக பாராட்டு தெரிவிக்கப்பட்டது.

இதற்கு முன்னர் இரண்டு முறை ஆஸ்திரேலிய சுற்றுப்பயணம் மேற்கொண்ட இந்திய அணியிடம் பகலிரவு டெஸ்ட் போட்டியை நடத்த அனுமதி கேட்கப்பட்டது. இதற்கு இந்திய கிரிக்கெட் நிர்வாகம் தொடர்ந்து மறுத்து வந்ததால் பகலிரவு டெஸ்ட் போட்டி நடக்க முடியாமல் போனது.

இந்நிலையில் பாகிஸ்தான் அணிக்கு எதிரான டெஸ்ட் போட்டியில் இன்னிங்ஸ் வெற்றி கண்ட பிறகு பத்திரிக்கையாளர் சந்திப்பில் கலந்துகொண்ட ஆஸ்திரேலிய அணியின் கேப்டன் டிம் பெய்ன் நிருபர்களின் கேள்விக்கு பதிலளித்தார்.

அப்போது நிருபர் ஒருவர், “இந்திய அணிக்கு எதிரான தொடரில் பகலிரவு டெஸ்ட் எங்கே நடைபெறும்? மற்றும் தற்போது இந்தியா இருக்கும் பார்மிற்கு  ஆஸ்திரேலிய அணியால் வெற்றி பெற முடியுமா? என கேள்வி எழுப்பினார்.

இதற்கு சற்றே கிண்டலான பாணியில் பதிலளித்த டிம் பெய்ன், “பார்ப்போம். விராட் கோலி என்ற மனநிலையில் இருக்கிறார் என்று  அவரின் அனுமதி கிடைத்த பிறகு பகல் இரவு டெஸ்ட் போட்டி குறித்து பேச இயலும். எந்த மைதானமாக இருந்தாலும் சரி ஒரு அணியாக செயல்பட்டு எப்பேர்ப்பட்ட அணியையும் வீழ்த்த தயாராக இருக்கிறோம்  அது விராட் கோலியின் அணியாக இருந்தாலும் சரி” என்றார்.

இதை கண்ட இந்திய ரசிகர்கள் என் மீது கடுப்பில் பெறுகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது

Prabhu Soundar:

This website uses cookies.