ஆஸ்திரேலியா அணியின் முன்னாள் சுழற்பந்துவீச்சாளர் பிராட் ஹாக் தமிழ்நாடு பிரீமியர் லீக் போட்டிகளுக்கு கமெண்ட்ரி செய்ய ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளார்.
தமிழ்நாடு பிரீமியர் லீக் போட்டிகள் துவங்குவதற்காக பரபரப்பான வேலைகள் நடைபெற்று வருகின்றன. வருகின்ற ஜூலை 11ம் தேதி துவங்க இருக்கும் இந்த சீசனில் 8 அணிகள் பங்கேற்கின்றன. இதில் முதல் திண்டுக்கல் மற்றும் திருச்சி அணிகள் மோதுகின்றன.
இந்த போட்டியில் ஆங்கிலத்தில் கமெண்ட்ரி செய்ய ஆஸ்திரேலியா அணியின் முன்னாள் சுழற்பந்துவீச்சாளர் பிராட் ஹாக் வருகிறார். இவர் இன்று முதலில் திருநெல்வேலி சென்று டிஎன்பிஎல் போட்டிக்கான ப்ரோமோஷன் வேளையில் ஈடுபட்டார். இவர் மேலும் இன்று திருநெல்வெலியில் கல்லூரி, பள்ளிகளுக்கும் சென்று மாணவர்களுடன் சில உரையாடல்களையும் மேற்கொண்டார்.
திருநெல்வேலிக்கு வரும் ஹாக் பயணத்தின் முழு பட்டியல் இங்கே:
1. 11:20 கல்லூரியில் வருகை, மாணவர் பிரதிநிதி பிராட் ஹாக்கை வரவேற்கிறார்
2. 11:40 கல்லூரி மாணவர்களுடன் உரையாடல் மற்றும் உடற்பயிற்சி சவால்
3. 14:30 ஹோட்டலில் இருந்து ஜெயேந்திர சரஸ்வதி பள்ளி செல்கிறார்
4. 15:00 பள்ளி வருகை, மாணவர் பிரதிநிதி பிராட் ஹாக்கை வரவேற்கிறது
5. 15:20 மாணவர்களுடன் உரையாடல் மற்றும் மேடையில் கேள்வி மற்றும் பதில்கள்
6. 16:15 ஹலோ எஃப்எம் நிலையத்தை அடைகிறார்
7. 16:30 ஹலோ எஃப்எம் நிலையத்தில் நேர்காணல்
8. 18:00 ஹோட்டல் செல்கிறார்
பிராட் ஹாக் ஆஸ்திரேலியா அணிக்காக..
ஆஸ்திரேலியா அணிக்காக 7 டெஸ்ட் போட்டிகள், 123 ஒருநாள் போட்டிகள் மற்றும் 15 டி20 போட்டிகளில் ஆடியுள்ள ஹாக் 17, 156 மற்றும் 7 விக்கெட்டுகளை வீழ்த்தியுள்ளார்.
ஐபில் போட்டிகளில் கொல்கத்தா மற்றும் ராஜஸ்தான் அணிக்காகவும் ஆடியுள்ளார்.