டிஎன்பிஎல் தொடரில் சூப்பர் ஓவர்: 2 பந்தில் ஆட்டத்தை முடித்த ஸ்ரீகாந்தின் மகன் அனிருதா ஸ்ரீகாந்த்!

தமிழ்நாடு பிரிமீயர் லீக் டி20 கிரிக்கெட் தொடரில் இன்று இரண்டு ஆட்டங்கள் நடைபெறுகிறது. முதல் ஆட்டத்தில்  காரைக்குடி காளைஸ் அணியை திருச்சி ஏதிர் கொண்டது. டாஸ் வென்ற திருச்சி வாரியர்ஸ் அணி பேட்டிங்கை தேர்வு செய்தது.

இதையடுத்து, தொடக்க வீரர்களாக ஆதித்யா மற்றும் அணியின் கேப்டன் ஸ்ரீகாந்த் அனிருதா ஆகியோர் களமிறங்கினர்.
ஆதித்யா 1 ரன் எடுத்திருந்த போது விக்னேஷ் பந்து வீச்சில் அவுட் ஆனார். அடுத்து வந்த சூர்ய பிரகாஷ் 12 ரன்களில் வெளியேறினார். ஆனாலும், மறுமுனையில் நிலைத்து நின்று ஆடிய கேப்டன் ஸ்ரீகாந்த் அதிகபட்சமாக 58 ரன்கள் அடித்தார். பின்னர் களமிறங்கிய ராஜ்குமார் கடைசி நேரத்தில் அதிரடியாக விளையாடி 13 பந்துகளில் 28 ரன்கள் விளாசினார்.

Vijay .M of Ruby Trichy Warriors bowls during match 2 of the fourth edition of TamilNadu Premier league 2019 played between IDREAM KARAKUDI KAALAI (IDKK) and RUBY TRICHY WARRIORS (RTW) held at the NPR College Ground, Dindigul on 20th July 2019nnPhoto by: Faheem Hussain/Focus Sports/ TNPL

இதன் மூலம் காரைக்குடி அணி 20 ஓவர்கள் முடிவில் 5 விக்கெட்டுகள் இழப்புக்கு 171 ரன்கள் எடுத்தது. இதனால் திருச்சி அணி வெற்றி பெற 172 ரன்கள் இலக்காக நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. ரூபி திருச்சி வாரியர்ஸ் தரப்பில் அந்த அணியின் சரவணகுமார் அதிகபட்சமாக 3 விக்கெட்டுகளை வீழ்த்தினார்.

திருச்சி அணியின் தொடக்க ஆட்டக்காரர்களாக அரவிந்த், விஜய் களமிறங்கினர். அரவிந்த் 13, ஆதித்யா 16 ஆகியோர் சீரான இடைவெளியில் வெளியேறினர். இதனையடுத்து விஜய் உடன் ராகவ் ஜோடி சேர்ந்து நிதானமாக ஆடினர். ராகுல் 22 ரன்கள் எடுத்த நிலையில் வெளியேறினார். பொறுப்புடன் ஆடிய கேப்டன் விஜய் அரை சதம் அடித்தார்.

Aniruda .S of Idream Karaikudi Kaalai plays a shot during match 2 of the fourth edition of TamilNadu Premier league 2019 played between IDREAM KARAKUDI KAALAI (IDKK) and RUBY TRICHY WARRIORS (RTW) held at the NPR College Ground, Dindigul on 20th July 2019nnPhoto by:R.Parthibhan/Focus Sports/ TNPL

விஜய் 81 ரன், கணபதி 21 ரன்கள் எடுத்து வெளியேற ஆட்டத்தில் பரபரப்பு ஏற்பட்டது. 6 பந்துளில் 11 ரன்கள் தேவைப்பட்டது. கடைசி 1 பந்தில் 3 ரன்கள் தேவைப்பட்ட நிலையில் 2 ரன்கள் எடுத்தது திருச்சி அணி. இதனால் சூப்பர் ஓவர் கடைப்பிடிக்கப்பட்டது.

இதைத் தொடர்ந்து நடைபெற்ற சூப்பர் ஓவரில் முதலில் பேட் செய்த திருச்சி, முரளி விஜய்யின் ஒரேயொரு சிக்ஸ் மூலம்,  11 ரன்கள் எடுத்தது. இதில் இரு விக்கெட்டுகள் வேறு. ஆனால், பிறகு களமிறங்கிய காரைக்குடி அணியில், அனிருதா 2 மெகா சிக்ஸர்களை தெறிக்கவிட 2 பந்துகளை மீதம் வைத்து வென்றது.

Sathish Kumar:

This website uses cookies.