தினேஷ் கார்த்திக்கை சம்பவம் செய்துவிட்டேன்! இன்டகிராம் பக்கத்தில் வீடியோ பதிவு செய்த அஸ்வின்!

தமிழ்நாடு கிரிக்கெட் தொடரின் 14-வது லீக் ஆட்டம் திருநெல்வேலியில் நடைபெற்றது. இதில் திண்டுக்கல் டிராகன்ஸ்-காரைக்குடி காளை அணிகள் மோதின. டாஸ் வென்ற காரைக்குடி அணி பேட்டிங்கை முதலில் தேர்வு செய்தது. இதையடுத்து, தொடக்க வீரர்களாக அந்த அணியின் கேப்டன் ஸ்ரீகாந்த் அனிருதா மற்றும் சூர்ய பிரகாஷ் களமிறங்கினர்.
சூர்ய பிரகாஷ் 20 ரன்களில் ஆட்டமிழந்தார். ஆனால் சிறப்பாக விளையாடிய ஸ்ரீகாந்த் 59 பந்துகளில் 7 சிக்சர்கள் 7 பவுண்டரிகள் உட்பட 98 ரன்கள் விளாசி ஆட்டமிழந்தார். பின்னர் வந்த வீரர்கள் திண்டுக்கல் அணியின் சிறப்பான பந்துவீச்சால் அடுத்தடுத்து தங்கள் விக்கெட்டுகளை பறிகொடுத்து வெளியேறினர். இறுதியில் காரைக்குடி அணி 20 ஓவர்கள் முடிவில் 7 விக்கெட்டுகள் இழப்புக்கு 158 ரன்கள் எடுத்தது.
திண்டுக்கல் அணி தரப்பில் ரோகித் மற்றும் முகமது தலா 2 விக்கெட்டுகளை வீழ்த்தினர்.
இதையடுத்து, 159 ரன்கள் அடித்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கிய திண்டுக்கல் அணியின் ஹரி நிஷாந்த் மற்றும் ஜெகதீசன் காரைக்குடி வீரர்களின் பந்துவீச்சை பவுண்டரிகளும் சிக்சர்களுமாக விளாசினர். ஹரி நிஷாந்த் 56 பந்துகளில் 5 சிக்சர்கள் உள்பட 81 ரன்கள் விளாசினார். மேலும் ஜெகதீசன் 47 பந்துகளில் 3 சிக்சர்கள் உள்பட 78 ரன்கள் அடித்தார்.
இதனால் திண்டுக்கல் அணி 17 ஓவர்கள் முடிவில் விக்கெட் இழப்பின்றி 161 ரன்கள் அடித்து காரைக்குடி அணியை 10 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வீழ்த்தி அபார வெற்றி பெற்றது.

 

 

-வது டி.என்.பி.எல். 20 ஓவர் கிரிக்கெட் போட்டி திண்டுக்கல் அடுத்த நத்தம் என்.பி.ஆர். கல்லூரி மைதானம், நெல்லை சங்கர் நகர் ஐ.சி.எல். மைதானம் ஆகிய 2 இடங்களில் நடை பெற்று வருகிறது.

நெல்லையில் நேற்று நடந்த ஆட்டத்தில் வி.பி. காஞ்சி வீரன்ஸ் 58 ரன் வித்தியாசத்தில் டூட்டி பேட்ரியாட்சை வீழ்த்தியது.

முதலில் விளையாடிய காஞ்சி வீரன்ஸ் 20 ஓவரில் 3 விக்கெட் இழப்புக்கு 193 ரன் குவித்தது. கேப்டன் அபராஜித் 48 பந்தில் 76 ரன்னும் (8 பவுண்டரி, 2 சிக்சர்), சித்தார்த் 38 பந்தில் 50 ரன்னும் (7 பவுண்டரி, 1 சிக்சர்), ஆர். சதீஷ் 19 பந்தில் 47 ரன்னும் (3 பவுண்டரி, 4 சிக்சர்) எடுத்தனர்.

Vijay .M of Ruby Trichy Warriors before the match 2 of the fourth edition of TamilNadu Premier league 2019 played between IDREAM KARAKUDI KAALAI (IDKK) and RUBY TRICHY WARRIORS (RTW) held at the NPR College Ground, Dindigul on 20th July 2019nnPhoto by: Faheem Hussain/Focus Sports/ TNPL

பின்னர் விளையாடிய முன்னாள் சாம்பியன் டூட்டி பேட்ரியாட்ஸ் அணியால் 8 விக்கெட் இழப்புக்கு 135 ரன்னே எடுக்க முடிந்தது. செந்தில்நாதன் அதிகபட்சமாக 25 ரன் எடுத்தார். கவுதம் 3 விக்கெட்டும், ஆர்.சதீஷ் 2 விக்கெட்டும் எடுத்தனர்.

காஞ்சி வீரன்ஸ் ஹாட்ரிக் வெற்றியை பெற்று புள்ளிகள் பட்டியலில் 2-வது இடத்துக்கு முன்னேறியது. சேப்பாக் சூப்பர் கில்லீசை விட அதிக ரன் இருந்ததால் 2-வது இடத்தை பிடித்தது.

டி.என்.பி.எல். போட்டியின் 16-வது ‘லீக்‘ ஆட்டம் நத்தத்தில் இன்று இரவு 7.15 மணிக்கு நடக்கிறது. இதில் நடப்பு சாம்பியன் மதுரை பாந்தர்ஸ்- திருச்சி வாரியர்ஸ் அணிகள் மோதுகின்றன.

மதுரை அணி 1 வெற்றி, 2 தோல்வியுடன் 2 புள்ளிகள் பெற்று 6-வது இடத்தில் உள்ளது. அந்த அணி டூட்டி பேட்ரியாட்சை 9 விக்கெட் வித்தியாசத்தில் வீழ்த்தி இருந்தது. திண்டுக்கல் டிராகன்சிடம் 30 ரன்னிலும், காஞ்சி வீரன்சிடம் 7 விக்கெட்டிலும் தோற்று இருந்தது. திருச்சி அணியை வீழ்த்தி 2-வது வெற்றி பெறும் ஆர்வத்தில் உள்ளது.

திருச்சி வாரியர்ஸ் அணி தான் மோதிய 3 ஆட்டத்திலும் தோற்று இருந்தது. காரைக்குடி காளையிடம் சூப்பர் ஓவரிலும், சேப்பாக் சூப்பர் கில்லீசிடம் 41 ரன் வித்தியாசத்திலும், கோவை கிங்சிடம் 26 ரன்னிலும் தோற்றது. அந்த அணி முதல் வெற்றிக்காக காத்திருக்கிறது.

Mohamed:

This website uses cookies.