அதிரடி காட்டிய ஹரி நிஷாந்த்… கோவையை வீழ்த்தி வெற்றி கணக்கை துவங்கியது திண்டுக்கல் அணி !!

தமிழ்நாடு ப்ரீமியர் லீக் தொடரின் நேற்றைய போட்டியில் கோவையை வீழ்த்தி திண்டுல்கல் அணி தனது முதல் வெற்றியை பதிவு செய்துள்ளது.

ஐபிஎல் தொடரை போன்று தமிழ்நாட்டிலும் ஆண்டுதோறும் உள்ளூர் டி.20 தொடரான தமிழ்நாடு ப்ரீமியர் லீக் தொடர் நடத்தப்பட்டு வருகிறது. இந்த தொடரின் மூலம் தமிழகத்தை சேர்ந்த இளம் வீரர்கள் பலர் தங்களது திறமைகளை வெளிப்படுத்தி ஐபிஎல் போன்ற பெரிய தொடர்களில் இடம்பெற்று வருகின்றனர்.

இதில் இந்த வருடத்திற்கான தொடர் கடந்த 23ம் தேதி துவங்கியது. மொத்தம் 28 லீக் போட்டிகளை கொண்ட இந்த தொடர் ஜூலை மாத இறுதி வரை நடைபெற உள்ளது.

இந்த தொடரின் நேற்றைய போட்டியில் திண்டுக்கல் அணியும், கோவை அணியும் மோதின.

திருநல்வேலியில் நடைபெற்ற இந்த போட்டியில் டாஸ் வென்ற திண்டுக்கல் டிராகன்ஸ் அணி முதலில் பந்துவீச்சை தேர்வு செய்தது.

இதனையடுத்து முதலில் பேட்டிங் செய்த கோவை கிங்ஸ் அணி 20 ஓவர்கள் முடிவில் 8 விக்கெட் இழப்பிற்கு 188 ரன்கள் குவித்தது. அந்த அணியின் அதிகபட்சமாக முகிலேஷ் 49 ரன்களும், சுரேஷ் குமார் 37 ரன்களும் எடுத்தனர்.

இதன்பின் 189 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற சற்று கடின இலக்கை துரத்தி களமிறங்கிய திண்டுக்கல் டிராகன்ஸ் அணிக்கு அந்த அணியின் துவக்க வீரர்களான ஹரி நிஷாந்த் 60 ரன்களும், விசால் வைதியா 49 ரன்களும் எடுத்து கொடுத்து வெற்றியை இலகுவாக்கினர். இதன்பின் வந்த பிரதீப் 24 ரன்களும், விவேக் 22 ரன்களும் எடுத்து கொடுத்ததன் மூலம் 19.2 ஓவரிலேயே இலக்கை எட்டிய திண்டுல்கல் அணி 5 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்று, நடப்பு தொடரில் தனது முதல் வெற்றியை பதிவு செய்துள்ளது.

Mohamed:

This website uses cookies.