டிஎன்பிஎல் ஏலம் இந்த மாத இறுதியில் நடைபெறும்!!

தமிழ்நாடு கிரிக்கெட் சங்கம் கடந்த 2016-ம் ஆண்டு தமிழ்நாடு பிரீமியர் லீக் டி20 தொடரை அறிமுகப்படுத்தியது. இதை ஸ்டார் கிரிக்கெட் ஒளிப்பரப்பு செய்தது. தமிழ்நாடு வீரர்கள் மட்டுமே பங்கேற்கும் இந்த லீக்கிற்கு நல்ல வரவேற்பு கிடைத்தது. 2016 மற்றும் 2017-ல் வெற்றிகரமாக லீக் நடைபெற்றது. 2016-ல் தூத்துக்குடி அணியும், 2017-ல் சேப்பாக் சூப்பர் கில்லிஸ் அணியும் கோப்பையை கைப்பற்றியது.

The (TNPL) is a celebrated cricket tournament in Tamil Nadu. The upcoming edition of the tournament will begin from July 11. The schedule hasn’t been released yet and is expected to be announced very soon.

இந்த இரண்டு வருடம் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி ஐபிஎல் தொடரில் பங்கேற்காததால், தமிழ்நாடு கிரிக்கெட் சங்கம் இந்த தொடரை நடத்தியது என்று பரவலாக பேசப்பட்டது. இந்நிலையில் ஜூலை 11-ந்தேதி 3-வது சீசன் தொடங்கும் என தமிழ்நாடு பிரீமியர் லீக் அதிகாரி தெரிவித்ததாக ஆங்கில இணைய தளம் ஒன்று செய்தி வெளியிட்டுள்ளது.

The Tamil Nadu Premier League (TNPL) draft is scheduled to take place on May 31 at the ICC Grand Chola from 10:30 am onwards. A total of 794 players have registered for the mega event. 

மேலும் அந்த செய்தியில் தமிழ்நாடு பிரீமியர் லீக் வீரர்களுக்கான ஏலம் மே 31-ந்தேதி, சென்னையில் உள்ள பிரபல ஹோட்டலில் நடைபெறும் எனவும், 794 வீரர்கள் பதிவு செய்துள்ளதாகவும், தொடருக்கான முழுஅட்டவணையை தயாரிப்பதற்காக போட்டியை ஒளிபரப்பும் நிறுவனத்துடன் பேசிக் கொண்டிருப்பதாவும் குறிப்பிடப்பட்டுள்ளது.

“A” – Pick any player including capped player
“UC” – Pick only uncapped player i.e. player who has not represented India or TN in Ranji / List A ODI or List A T20 games.

ஏலத்தில் பங்கேற்கும் அணிகள் தேசிய அணிக்காக விளையாடிய எந்தவொரு வீரர்களையும் (Capped Players) தக்கவைக்க முடியாது என்றும், முதல் இரண்டு சுற்றில் எந்தவொரு வீரரையும் ஏலம் எடுக்கலாம் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது

Editor:

This website uses cookies.