ஆஸ்திரேலியா மற்றும் நியூசிலாந்து அணிகளுக்கு இடையேயான அதிகாரப் பூர்வமற்ற ஒருநாள் தொடரில் தற்போது நடைபெற உள்ளது. அந்த அணியின் கேப்டன் வில்லியம்சன் தற்போது ஐபிஎல் தொடரில் விளையாடி கொண்டு இருப்பதால் அந்த அணியின் விக்கெட் கீப்பர் பேட்ஸ்மேன் டாம் லேத்தம் நியூசிலாந்து அணிக்கு கேப்டனாக நியமிக்கப்பட்டுள்ளார்.
இங்கிலாந்தில் நடைபெறும் 2019 உலகக்கோப்பை கிரிக்கெட்டுக்கான 15 வீரர்கள் கொண்ட முழுமையான நியூஸிலாந்து அணி அறிவிக்கப்பட்டுள்ளது.
இஷ் சோதி, டாம் பிளண்டெல் ஆகியோர் இந்த அணியில் இடம்பெற்றுள்ளனர். அதிரடி விக்கெட் கீப்பர் பேட்ஸ்மேன் டிம் செய்ஃபர்ட் காயமடைந்துள்ளதால் டாம் பிளண்டெல் என்ற பதிலி விக்கெட் கீப்பர் அணியில் இடம்பெற்றுள்ளார்.
லெக் ஸ்பின்னர் டாட் ஆஸ்ட்ல்தான் இடம் பெறுவார் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில் இஷ் சோதி இடம்பெற்றுள்ளார்.
ஹென்றி நிகோல்ஸ், மார்டின் கப்தில் தொடக்க வீரர்களாக களமிறங்கும் நிலையில் கொலின் மன்ரோவும் தன் இடத்தைத் தக்கவைத்துள்ளார். ஜிம்மி நீஷம், கொலின் டி கிராண்ட் ஹோம் ஆகியோர் ஆல்ரவுண்டர்களாகத் தேர்வு செய்யப்பட்டுள்ளனர். இன்னொரு ஸ்பின் ஆல்ரவுண்டராக மிட்செல் சாண்ட்னர் இடம்பெற்றுள்ளார்.
நியூஸிலாந்து உலகக்கோப்பை அணி விவரம்:
கேன் வில்லியம்சன் (கேப்டன்), மார்டின் கப்தில், ஹென்றி நிகோல்ஸ், ராஸ் டெய்லர், டாம் லேதம், கொலின் மன்ரோ, டாம் பிளண்டல், ஜிம்மி நீஷம், கொலின் டி கிராண்ட் ஹோம், மிட்செல் சாண்ட்னர், இஷ் சோதி, டிம் சவுதி, மேட் ஹென்றி, லாக்கி பெர்குசன், ட்ரெண்ட் போல்ட்.
ஒவ்வொரு அணிகளும் 15 பேர் கொண்ட வீரர்கள் பட்டியலை அறிவிக்க தயாராகி வருகின்றன. நியூசிலாந்து அணி இன்று உலகக்கோப்பைக்கான வீரர்கள் பட்டியலை வெளியிடும் என்று தெரிவிக்கப்பட்டிருந்தது. அந்த அணியில் சான்ட்னெர் முதன்மை சுழற்பந்து வீச்சாளராக உள்ளார். அவருடன் டாட் ஆஸ்ட்லேவை சேர்க்க நியூசிலாந்து தேர்வுக்குழு முடிவு செய்தாக கூறப்படுகிறது.
இந்நிலையில் நியூசிலாந்து கேப்டன் கேன் வில்லியம்சன், இஷ் சோதியை அணியில் சேர்க்க வேண்டும். அவருக்கு அனுபவம் உள்ளது. நாட்டிங்காம்ஷைர் அணிக்காக விளையாடியுள்ளார். அதனால் இங்கிலாந்து சூழ்நிலையை புரிந்து கொண்டிருப்பார். அந்த சூழ்நிலைக்கு ஏற்ற வீரர் என்று தெரிவித்துள்ளார்.
இதனால் வீரர்கள் தேர்வு தள்ளிப்போகியுள்ளதாக கூறப்படுகிறது. மாற்று விக்கெட் கீப்பராக டாம் பிளண்டல் இடம்பிடிக்க வாய்ப்புள்ளது. அதேபோல் கொலின் முன்றோ 3-வது தொடக்க பேட்ஸ்மேனாக இடம்பெறலாம்.வ்