இந்திய அணியின் தோல்விக்கு இவர் ஒருவர்தான் காரணம்: ஓப்பனாக பேசிய விராட் கோலி

நியூசிலாந்துக்கு எதிராக 347 ரன்கள் போதுமானது என்று நினைத்தோம், பந்து வீச்சும் சிறப்பாக சென்றபோது, டாம் லாதம் வெற்றியை பறித்துவிட்டார் என விராட் கோலி தெரிவித்துள்ளார்.

நியூசிலாந்து – இந்தியா இடையிலான முதல் ஒருநாள் கிரிக்கெட் போட்டி ஹாமில்டனில் நடைபெற்றது. முதலில் பேட்டிங் செய்த இந்தியா 347 ரன்கள் குவித்தது.

பின்னர் 348 ரன்கள் அடித்தால் வெற்றி என்ற இலக்குடன் நியூசிலாந்து களம் இறங்கியது. 33-வது ஓவர் வரை ஆட்டம் இந்தியாவின் கையில் இருந்தது. அதன்பின் ராஸ் டெய்லர் – டாம் லாதம் ஜோடி சிறப்பாக விளையாட நியூசிலாந்து 48.1 ஒவரில் 6 விக்கெட் இழப்பிற்கு 348 ரன்கள் எடுத்து அபார வெற்றி பெற்றது. ராஸ் டெஸ்லர் – டாம் லாதம் ஜோடி 4-வது விக்கெட்டுக்கு 79 பந்தில் 138 ரன்கள் குவித்தது குறிப்பிடத்தக்கது.

HAMILTON, NEW ZEALAND – FEBRUARY 05: Prithvi Shaw of India bats during game one of the One Day International Series between New Zealand and India at Seddon Park on February 05, 2020 in Hamilton, New Zealand. (Photo by Hagen Hopkins/Getty Images)

போட்டியில் தோல்வியடைந்தது குறித்து இந்திய அணி கேப்டன் விராட் கோலி கூறுகையில் ‘‘நியூசிலாந்து அணி மிகவும் அற்புதமான ஆட்டத்தை வெளிப்படுத்தினர். 347 ரன்கள் போதுமான என்று நினைத்தோம். குறிப்பாக நாங்கள் தொடக்கத்தில் சிறப்பாக பந்து வீசினோம். போட்டியை டாம் லாதம் எங்களிடம் இருந்து பறித்துவிட்டார். மிடில் ஓவர்களில் இருவரையும் எங்களால் கட்டுப்படுத்த முடியவில்லை.

நாங்கள் நல்ல முறையில்தான் பீல்டிங் செய்தோம். ஒரு கேட்ச்-ஐ விட்டோம். இன்னும் முன்னேற்றம் காண்பது அவசியம். ஒரு வாய்ப்பை பற்றி சிந்தித்துக் கொண்டிருக்க முடியாது.

HAMILTON, NEW ZEALAND – FEBRUARY 05: Tom Latham of New Zealand bats during game one of the One Day International Series between New Zealand and India at Seddon Park on February 05, 2020 in Hamilton, New Zealand. (Photo by Hagen Hopkins/Getty Images)

எங்களை விட நியூசிலாந்து வீரர்கள் சிறப்பாக பேட்டிங் செய்தனர். இதனால் இன்றைய ஆட்டத்தில் வெற்றிக்கு அவர்கள் தகுதியானவர்கள். இரண்டு அறிமுக தொடக்க வீரர்களும் சிறப்பான தொடக்கத்தை ஏற்படுத்தி கொடுத்தார்கள். இதை அவர்கள் தொடர்வார்கள் என்று நம்புகிறேன். ஷ்ரேயாஸ் அய்யரின் சதம் அற்புதம். கேஎல் ராகுல் ஆட்டம் சூப்பர்’’ என்றார்.

Sathish Kumar:

This website uses cookies.