சூர்யகுமார் யாதவ் இல்லாதது இந்திய அணிக்கு பெரும் இழப்பாக அமையக்கூடும் என்று முன்னாள் ஆஸ்திரேலிய அணியின் கோச் கூறியுள்ளார்..
ஐபிஎல் டி.20 தொடரின் 13வது சீசன் வெற்றிகரமாக நடந்து முடிந்துள்ளது. கடந்த தொடர்களை விட இந்த வருடத்திற்கான தொடர் பெரும் குழப்பமாகவும், விறுவிறுப்பு இல்லாமலுமே நடந்து முடிந்துள்ளது.
கொரோனா அச்சுறத்தல், ரசிகர்கள் இல்லாத மைதானம், பெரும்பாலான முக்கிய வீரர்கள் விலகல்.. என பல பிரச்சனைகளை கடந்த இந்த தொடர் நடந்து முடிந்துள்ள நிலையில், அடுத்த வருடத்திற்கான தொடர் வழக்கம் போல் ஏப்ரல் – மே மாதங்களிலேயே நடக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
இந்த ஆண்டு நடைபெற்ற ஐபிஎல் தொடர்களில் மும்பை இந்தியன்ஸ் அணியை தவிர சொல்லிக்கொள்ளும் அளவிற்கு எந்த அணியும் சிறப்பாக செயல்படவில்லை.
குறிப்பாக இந்த ஐபிஎல் போட்டி தொடரில் இளம் கிரிக்கெட் வீரர்கள் தனது அபார திறமையை வெளிப்படுத்தி அனைவரையும் வியப்பில் ஆழ்த்தினர்.
அந்த வகை மும்பை இந்தியன்ஸ் அணியின் நட்சத்திர வீரராக திகழ்ந்த சூர்யகுமார் யாதவ் தனது அபார திறமையை வெளிப்படுத்தி அனைத்து கிரிக்கெட் ரசிகர்களையும் மற்றும் ஜாம்பவான் களையும் வியப்பில் ஆழ்த்தினார்.
இவர் 15 போட்டிகளில் பங்கெடுத்து 480 ரன்கள் குவித்தார். இவருடைய ஸ்ட்ரைக் ரேட் 150 . மகாராஷ்டிராவில் பிறந்த இவர் சில ஆண்டுகள் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிக்காக தேர்ந்தெடுக்கப்பட்டார் ஆனால் அங்கு அவருக்கு சரியான வாய்ப்பு கிடைக்கவில்லை. பின் மும்பை இந்தியன்ஸ் அணிக்காக தேர்வு செய்யப்பட்ட இவர் மிகச்சிறப்பான முறையில் விளையாடி மும்பை இந்தியன்ஸ் அணியின் முக்கிய வீரராக திகழ்ந்து கொண்டிருக்கிறார்.
இன்னும் சொல்லப்போனால் மும்பை இந்தியன்ஸ் அணியின் பல வெற்றிகளுக்கு சூர்யகுமார் யாதவ் முக்கிய காரணமாக திகழ்ந்தார்.
ஆஸ்திரேலியா சுற்றுப்பயணம் மேற்கொள்ள இருக்கும் இந்திய அணி நான்கு டெஸ்ட் போட்டிகள், 3 டி20 போட்டிகள் மற்றும் 3 ஒருநாள் போட்டிகளில் பங்கேற்க உள்ளது.
இதில் நடராஜன், வருன் சக்கரவர்த்தி போன்ற இளம் வீரர்களுக்கு வாய்ப்பு கொடுக்கப்பட்டுள்ளது. எதிர்பாராதவிதமாக சூர்யகுமார் யாதவிற்க்கு இந்திய அணியில் இடம் கிடைக்கவில்லை. இது ரசிகர்கள் மத்தியிலும் கிரிக்கெட் விமர்சகர்கள் மத்தியிலும் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது.
அபரிவிதமான பார்மில் இருக்கும் சூர்யகுமார் யாதவ் இல்லாதது இந்திய அணிக்கு ஒரு பெரும் இழப்பாக இருக்கும் என்று பல முன்னணி கிரிக்கெட் வீரர்கள் தனது கருத்தை தெரிந்து கொள்ளனும் இதுபற்றி ஹைதராபாத் அணியின் முன்னாள் கோச் டாம் மூடி தெரிவித்ததாவது, சூர்யகுமார் யாதவ் ஒரு மிகச் சிறந்த பேட்ஸ்மேன் இவருடைய ஒவ்வொரு ஷாட்டிலும் மிக நேர்த்தியாக உள்ளது. இவர் பொறுப்புடன் ஆடி தனது நிலையான பார்மை வெளிப்படுத்துகிறார் என்று கூறினார்.
மேலும் அவர் கூறியதாவது மும்பை இந்தியன்ஸ் அணியில் மூன்றாவது இடத்தில் களம் இறங்கும் சூர்யகுமார் யாதவ் ஓப்பனர்கள் செய்யும் தவறை சரிசெய்து அணிக்கு ஒரு நிலையான ஸ்கோரை கொடுப்பதில் மிகவும் சிறப்பக செயல்படுகிறார்.பேட்டிங் ஸ்டைல் ஃபர்ஸ்ட் கிளாஸாக உள்ளது என்றும் அவர் கூறியுள்ளார்.
மேலும் சூரர்யகுமார் யாதவ் பற்றி இந்திய அணியின் முன்னாள் வீரரும் கொல்கத்தா அணியின் முன்னாள் கேப்டனுமான கௌதம் காம்பீர் தெரிவித்ததாவது, மும்பை இந்தியன்ஸ் அணிக்கு சூர்யகுமார் யாதவ் முக்கிய பங்கு வகிக்கிறார், இவருடைய பேட்டிங் ஸ்டைல் மிகவும் அருமையாக உள்ளது இவர் பல இக்கட்டான நிலையில் தனது கடமையை உணர்ந்து சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தினார், மேலும் என்னுடைய இந்த தொடருக்கான சிறந்த வீரர் இவர்தான் என்று சூர்யகுமார் யாதவ் புகழ்ந்து கூறியுள்ளார்.