இதுவரை நடந்து முடிந்த ஐ. பி.எல் தொடர்களில் தங்களது திறமையான பந்து வீச்சால் தனது அணிக்காக அதிக விக்கெட்டுகளை வீழ்த்திய வீரர்கள்
ஐ.பி.எல் டி.20 தொடர் கடந்த 2008 ஆம் ஆண்டு தொடங்கி தற்போது வரை விறுவிறுப்பாக நடந்து வருகிறது. இந்த தொடர் கிரிக்கெட் ரசிகரளின் பெரும் வரவேற்பை பெற்றுள்ளது. ஓரு நாள் போட்டியை காட்டிலும் டி.20 தொடர்களே ரசிகர்களின் மத்தியில் பெரும் ஆர்வத்தை தூண்டியுள்ளது.
இவ்வாறு இதுவரை 10 ஐ. பி.எல் சீசன்கள் முடிவடைந்த நிலையில் 11 வது சீசன் இன்று கோலாகலமாக தொடங்க உள்ளது.
இந்த போட்டிகளில் 8 அணிகள் பங்கேற்கின்றனர்.60 ஆட்டங்கள் மற்றும் 51 நாட்கள் நடைபெற உள்ளது.
இந்த டி.20தொடரின் மூலம் புதிய இளம் வீரர்கள் உருவாகி கொண்டிருக்கிறார்கள்.
இதுவரை நடந்த ஐ. பி.எல் தொடர்களில் அதிக விக்கெட்டுகளை வீழ்த்திய வீரர்களின் பட்டியல் இதோ.
10. ஹர்பஜன் சிங் -24 விக்கெட்டுகள்
கடந்த 2013 ஆம் ஆண்டு நடைபெற்ற ஐ. பி.எல் தொடரில் ‘மும்பை இந்தியன்ஸ்’அணிக்காக 19 போட்டிகளில் பங்கேற்று 70 ஒவர்கள் வீசி 24 விக்கெட்டுகளை எடுத்து இந்த பட்டியலில் 10 வது இடத்தை பெறுகிறார்.