டி.20 போட்டிகளில் அதிகமுறை இரட்டை சதங்கள் கடந்த டாப் 10 அணிகள் பட்டியல்
டெஸ்ட் மற்றும் ஒருநாள் போட்டிகளுக்கு மாற்றாக உருவாக்கப்பட்ட டி.20 போட்டிகள் மிக குறுகிய காலத்திற்குள் மிகப்பெரும் வரவேற்ப்பை பெற்றுள்ளதற்கு, வீரர்களின் அதிரடி ஆட்டங்களே காரணம்.
120 பந்துகள் மட்டுமே கொண்ட டி.20 போட்டியில் ஒரு அணி 200+ ரன்கள் எடுப்பது மிக அரிதான விசயமாக இருந்தது. ஆனால் சமீபகாலமாக டி.20 போட்டிகளின் நிலைமை தலைகீழாக மாறியுள்ளது. 200+ ரன்கள் அடிப்பது சர்வ சாதரணமாக நிகழ்ந்து வருகிறது.
அந்த வகையில் சர்வதேச டி.20 அரங்கில் இதுவரை அதிகமாக 200 மற்றும் 200 ரன்களுக்கும் அதிகமான ஸ்கோர்கள் அடித்துள்ள டாப் 10 அணிகள் பட்டியலை இங்கு பார்ப்போம்.
10; ஆஃப்கானிஸ்தான் – 3 முறை
சமகால கிரிக்கெட் உலகில் வளர்ந்து வரும் கிரிக்கெட் அணியாக இருக்கும் ஆஃப்கானிஸ்தான் கிரிக்கெட் அணியே இதுவரை மூன்று முறை 200க்கும் அதிகமான ரன்கள் குவித்துள்ளது. ஆஃப்கானிஸ்தான் அணி மூன்று முறை 200 ரன்களை கடந்துள்ளதான் இந்த பட்டியலில் 10வது இடத்தில் உள்ளது.