இங்கிலாந்து அணிக்காக அதிக சதம் அடித்தவர்கள் வரிசையில் முதலிடம் பிடித்தார் ஜோ ரூட்
இந்திய அணியுடனான ஒருநாள் தொடரில் தொடர்ச்சியாக இரண்டு சதம் அடித்ததன் மூலம் இங்கிலாந்து அணிக்காக அதிக சதங்கள் அடித்த வீரர்கள் பட்டியலில் ஜோ ரூட் முதலிடம் பிடித்துள்ளார்.
இங்கிலாந்து சென்றுள்ள கோஹ்லி தலைமையிலான இந்திய கிரிக்கெட் அணி இங்கிலாந்து அணியுடன் மூன்று டி.20, மூன்று ஒருநாள் போட்டிகள் மற்றும் ஐந்து டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடரில் பங்கேற்றுள்ளது.
இதில் முதலில் நடைபெற்ற டி.20 தொடரை இந்திய அணி 2-1 என்ற கணக்கில் கைப்பற்றிய நிலையில் அடுத்ததாக நடைபெற்ற ஒருநாள் தொடரை இங்கிலாந்து அணி 2-1 என்ற கணக்கில் கைப்பற்றியது.
இந்த ஒருநாள் தொடரின் முதல் போட்டியில் வெற்றி பெற்று வெற்றியுடன் தொடரை துவங்கிய இந்திய அணி அடுத்த இரண்டு போட்டிகளிலும் தோல்வியடைந்து தொடரை இழப்பதற்கு மிக முக்கிய காரணமாக திகழ்ந்தவர் ஜோ ரூட். கடைசி இரண்டு போட்டிகளிலும் ஆட்டமிழக்காத ஜோ ரூட், இரண்டு போட்டியிலும் சதம் அடித்ததன் மூலமே இங்கிலாந்து அணிக்கு வெற்றி வசமானது.
இந்நிலையில் தொடர்ச்சியான இந்த இரண்டு சதத்தின் மூலம் இங்கிலாந்து அணிக்காக அதிக சதங்கள் அடித்த வீரர்கள் பட்டியலில் ஜோ ரூட் முதலிடம் பிடித்துள்ளார்.
இங்கிலாந்து அணிக்காக அதிக சதம் அடித்துள்ள டாப் 5 வீரர்கள் பட்டியல் இங்கே;
- ஜோ ரூட்;
இங்கிலாந்து அணியின் மிக முக்கிய வீரராக திகழ்ந்து வரும் ஜோ ரூட் இதுவரை இங்கிலாந்து அணிக்காக 13 சதங்கள் அடித்து இந்த பட்டியலில் முதலிடத்தில் உள்ளார்.