இங்கிலாந்துக்கு எதிராக நாட்டிங்கமில் நடைபெறும் முதல் ஒருநாள் போட்டியில் இந்திய கேப்டன் விராட் கோலியினால் முதலில் பேட் செய்ய தைரியமாக அழைக்கப்பட்ட இங்கிலாந்து மீண்டும் குல்தீப் சுழலில் சிக்கித் திணறி ஒருவழியாக 268 ரன்கள் எடுத்து அனைத்து விக்கெட்டுகளையும் இழந்தது.
ஜேசன் ராய், பேர்ஸ்டோ, ஜோ ரூட், ஸ்டோக்ஸ், பட்லர், டி.ஜே.வில்லே ஆகிய முக்கிய விக்கெட்டுகளைக் கைப்பற்றி 10 ஓவர்களில் 25 ரன்களுக்கு 6 விக்கெட்டுகளைக் கைப்பற்றினார். இதில் 38 டாட் பால்கள், சாஹல் 10 ஓவர்களில் 51 ரன்கள் முக்கிய விக்கெட்டான மோர்கனைக் காலி செய்தார். வேகப்பந்து வீச்சுக் கவலை தொடர்கிறது, உமேஷ் யாதவ் 70 ரன்களையும் சித்தார்த் கவுல் 62 ரன்களையும் பாண்டியா 7 ஓவர்களில் 47 ரன்களையும் கொடுத்து 179 ரன்களை 26.5 ஓவர்களில் விட்டுக் கொடுத்தனர்.
தற்போது ஒருநாள் போட்டிகளில் அதிக விக்கெட் கைப்பற்றிய டாப்-5 பந்து வீச்சாலர்களை காண்போம்.
5.டேனியல் வெட்டோரி – 5/6
நியூசிலாந்து அணியின் முன்னாள் கேப்டனும் அந்த நாட்டின் மிகச்சிறந்த ஸ்பின்னர்களில் ஒருவருமான தேனில் வெட்டோரி இந்த பட்டியலில் 5ம் இடம் பிடித்துள்ளார். கடந்த 2007ஆம் ஆண்டு குயின்ஸ்டவுனில் நடந்த ஒருநாள் போட்டியில் வங்கதேச அணிக்கெதிராக 5 விக்கெட்கள் வீழ்த்தியுள்ளார்.
இதில் சிறப்பம்சம் என்னவென்றால் அவர் மொத்தம் வீசியது 6 ஓவர்கள் மட்டுமே அதில் அவர் விட்டுக்கொடுத்து வெறும் 7 ரன்கள் மட்டுமே அதில் இரண்டு ஒவர்கள் மெயிடன்.