ஐபில்-இல் பல நாடுகளில் இருந்து பல நட்சத்திர வீரர்கள் விளையாட வருகிறார்கள். நாட்டுக்காக விளையாடும்போது எதிராணியாகவும், ஐபில் விளையாடும்போது ஒரே அணியிலும் விளையாடுகிறார்கள். ஐபில் லீக்கில் பல சண்டை காட்சிகள் நடந்திருக்கிறது.
சில சண்டைகள் இந்திய வீரர்களிடையே நடக்க, சில சண்டைகள் சர்வதேச வீரர்களிடையே நடந்திருக்கிறது. சில சமயத்தில் கையை ஓங்கியிருக்கிறார்கள் வீரர்கள். ஐபில்-இல் நடந்த டாப்-5 பெரிய சண்டைகளை பற்றி இப்பொழுது பாப்போம்.
ஹர்பஜன் சிங்க் vs ஸ்ரீசாந்த்
இந்திய வேகப்பந்து வீச்சாளர் பல சர்ச்சைகளில் சிக்கியுள்ளார். ஐபில்-இன் போது அவர் ஹர்பஜனிடம் கன்னத்தில் ஒரு அரை வாங்கினார். ஸ்ரீசாந்துக்கு ஒரு அரை விட்டதால், 12-போட்டி விளையாட தடை விதித்தார்கள். ஸ்ரீசாந்த் அழுத காட்சி தான் செய்தி தாள்களின் முதல் பக்கத்தை ஆக்கிரமித்தது.
பொல்லார்ட் vs வாட்சன்
மேற்கிந்திய வீரர் பொல்லார்ட் ஒரு அதிரடி வீரர் என்பது அனைவருக்கும் தெரிந்த ஒன்றுதான். வாட்சன் பேட்டிங் ஆடிக்கொண்டிருந்தார். பொல்லார்ட் பந்துடன் சில வார்த்தைகளையும் வீசி விட்டார். ஆனால், வாட்சன் நடுவரிடம் சொல்லிவிட்டு மறுபடியும் விளையாட தொடங்கினார். சிறிது நேரத்தில் வாட்சன் அவுட் ஆக, பொல்லார்ட் எகிறிக்குதித்து கொண்டாடினார். பீல்டிங்கின் போது பொல்லார்ட் ராஜஸ்தான் டக்-அவுடிடம் நிற்க, சமயம் பார்த்து வாட்சனும் திருப்பி திட்டிவிட்டார். இது பொல்லார்டுக்கும் வாட்சனுக்கும் இடையே பெரும் பிரிவை ஏற்படுத்தியது.
கங்குலி vs வார்னே
கங்குலி கொல்கத்தாவிற்கு முதல் சீசனில் ஆடியபோது, கங்குலி அடித்த பந்தை க்ரீம் ஸ்மித் கேட்ச் பிடித்தார். ஆனால், அதை ஒப்புக்கொள்ளாத கங்குலி டிவி நடுவரிடம் கேட்டார். அது முதல் ஐபில் சீசன் என்பதால் டிவி நடுவரால் சரியான தீர்ப்பு அளிக்க முடியவில்லை. அதனால், கங்குலிக்கு சாதகமாகவே தீர்ப்பு அளித்தார்கள். ஆனால், அவர் அடுத்த ஓவரிலேயே அவுட் ஆகி பெவிலியன் திரும்பினார்.
போட்டிக்கு பிறகு,”ஒரு சர்வதேச கேப்டன் ஸ்மித் கேட்ச் பிடித்து, அவுட் என்று சொன்னதை ஒப்புக்கொள்ளாமல், நடுவரிடம் கேட்டார் கங்குலி. இது எனக்கு மிகவும் வருத்தத்தை அளிக்கிறது,” என்றார் வார்னே.
பொல்லார்ட் vs ஸ்டார்க்
பொல்லார்ட் இன்னொரு முறை சர்ச்சையில் ஈடுபட்டு இருக்கிறார். ஆனால், இந்த முறை பேட்டிங் ஆடும்பொழுது. ஆஸ்திரேலியாவின் வேக பந்து வீச்சாளர் மிட்சல் ஸ்டார்க் பொல்லார்டுக்கு பவுன்சர் வீசினார். அடுத்த பந்து பொல்லார்ட் அடிக்க மறுபடியும் பவுன்சர் வீசினார் ஸ்டார்க். இதனால் கட்டுப்படைந்த பொல்லார்ட் தன்னுடைய பேட்டை ஓங்கினார். பின் கிறிஸ் கெய்ல் பொல்லார்டை சமாதானம் படுத்த, சிரித்து கொண்டே சென்றார் மிட்சல் ஸ்டார்க்.
கம்பிர் vs கோலி
டெல்லி வீரர்கள் கவுதம் கம்பிர் மற்றும் விராட் கோலி இந்தியாவிற்காக பல போட்டிகளை வென்றிருக்கிறார்கள். ஆனால், ஐபில் என்று வரும் போது இருவரும் அவர் அவர் அணிக்கு ஆடுகிறார்கள். கோலி சங்வான் ஓவரில் தொடர்ந்து இரண்டு சிக்ஸர்களை அடித்துவிட்டு அவுட் ஆனார். கோலி விக்கெட்டை கொண்டாடினார்கள் கொல்கத்தா அணி வீரர்கள். இதனால், கோலிக்கும் கம்பிருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது. பிறகு இவர்களுக்கு அபராதம் விதித்தனர். இந்த சண்டை, அந்த ஐபில் சீசன் முழுவதும் பேசப்பட்டது.