டி20 கிரிக்கெட்டில் அதிக விக்கெட் எடுத்த முதல் 5 வீரர்கள்

டி20 கிரிக்கெட் என்பது பேட்ஸ்மேன்களுக்கான போட்டி என்று சொல்கிறார்கள். ஆனால், போட்டியை மாற்றும் திறமை பந்துவீச்சாளர்களுக்கும் அதிகம் உண்டு. முக்கியமான நேரங்களில் விக்கெட் எடுத்தாலே போதும், போட்டியின் நிலைமையையே பந்துவீச்சாளர்கள் மாற்றி விடுவார்கள். இந்நிலையில், டி20 போட்டிகளில் அதிக விக்கெட் எடுத்திருக்கும் பந்துவீச்சாளர்களை பார்ப்போம்.

ஷாஹித் அப்ரிடி – 287

பாகிஸ்தான் அணியின் நட்சத்திர ஆல்-ரவுண்டர் ஷாஹித் அப்ரிடி, உலகம் முழுவதும் உள்ளூர் டி20 தொடர்களில் விளையாடி வருகிறார். அவரது அட்டகாசமான சூழலால் பல விக்கெட்டுகளை எடுத்திருக்கிறார். இதுவரை டி20 போட்டிகளில் 287 விக்கெட் எடுத்திருக்கிறார் ஷாஹித் அப்ரிடி.

ஷகிப் அல் ஹசன் – 292

வங்கதேச அணியின் ஆல்-ரவுண்டர் ஷகிப் அல் ஹசன் இந்தியன் பிரீமியர் லீக், பங்களாதேஷ் பிரீமியர் லீக், பாகிஸ்தான் பிரீமியர் லீக் போன்ற தொடர்களில் விளையாடி வருகிறார். இதுவரை 252 டி20 போட்டிகளில் விளையாடி உள்ள அவர் 292 விக்கெட் எடுத்திருக்கிறார்.

சுனில் நரைன் – 307

வெஸ்ட் இண்டீஸ் அணியின் சுழற்பந்து வீச்சாளர் சுனில் நரைன் உலகில் நடக்கும் உள்ளூர் டி20 தொடர்களில் விளையாடி வருகிறார். இவரது பயங்கரமான பந்துவீச்சால் பல போட்டிகளின் நிலைமையையே மாற்றி இருக்கிறார். 262 போட்டிகளில் விளையாடி இருக்கும் நரைன் 307 விக்கெட் எடுத்திருக்கிறார்.

லசித் மலிங்கா – 331

இலங்கை அணியின் யார்க்கர் கிங் லசித் மலிங்கா இதுவரை 248 டி20 போட்டிகளில் விளையாடி 331 விக்கெட் எடுத்து இந்த பட்டியலில் இரண்டாவது இடத்தில் இருக்கிறார். இவரது அதிவேக யார்கரால் பல விக்கெட்டுகளை எடுத்துள்ளார்.

டுவைன் பிராவோ – 400

31 July 2016; Dwayne Bravo of Trinbago Knight Riders celebrates taking 4 wickets for 13 runs during Match 29 of the Hero Caribbean Premier League match between Trinbago Knight Riders and St Kitts and Nevis Patriots at Central Broward Stadium in Lauderhill, Florida, United States of America. Photo by Randy Brooks/Sportsfile.

வெஸ்ட் இண்டீஸ் அணியின் அட்டகாச ஆல்-ரவுண்டர் டுவைன் பிராவோ, 365 டி20 போட்டிகளில் விளையாடி 400 விக்கெட்டுகளை எடுத்துள்ளார். டி20 போட்டிகளில் 400 விக்கெட்டுகள் எடுத்த முதல் வீரர் இவர் தான். வேகமான பந்து, மெதுவான பந்து என வித்தியாச வித்தியாசமாக வீசி விக்கெட் எடுப்பதில் இவர் வல்லவர்.

Silambarasan Kv: Cricket Freak | Sehwag Devotee | Love to Write Articles!

This website uses cookies.