பணம் அதிகம் சம்பாதிக்கும் போட்டிகளில் கிரிக்கெட் போட்டி மிகவும் பிரசித்தி பெற்ற ஒன்றாகும்,இதில் விளையாடும் வீரர்கள் பயிற்சியாளர்கள் மற்றும் அணி நிர்வாகம் விளம்பரங்கள் என அனைத்திற்கும் அதிகப்படியான செலவுகள் உள்ளது.
குறிப்பாக ஒரு அணியில் விளையாடும் வீரர்கள் மற்றும் பயிற்சியாளர்களுக்கு அதிகப்படியான தொகை சம்பளமாக கொடுக்கப்படுகிறது இன்னும் சொல்லப்போனால் அதிகமான சம்பளம் வாங்கும் துறைகளில் விளையாட்டு துறை மிக பிரதானமான ஒன்றாக திகழ்ந்து வருகிறது. அதிலும் மிகத் திறமையான வீரர்கள் மற்றும் பயிற்சியாளர்களுக்கு அந்த அணி அதிகப்படியான சம்பளத்தை கொடுத்து தங்கள் அணியில் தக்கவைத்துக் கொண்டிருக்கிறது இந்நிலையில் அப்பேர்பட்ட அதிகப்படியான சம்பளம் வாங்கும் 5 பயிற்சியாளர்கள் பற்றி இங்கு காண்போம்.
மிஸ்பா உல் ஹக்
பாகிஸ்தான் அணியின் முன்னாள் ஜாம்பவான் misbah-ul-haq ஒரு தலை சிறந்த வீரராக தன் விளையாடிய காலத்தில் 40 வயதாகும் மிஸ்பா உல் ஹக் தனது ஓய்விற்குப் பின் 2019இல் பாகிஸ்தான் அணியின் தலைமை பயிற்சியாளராக செயல்பட்டு மிக்கி ஆர்தர்கு பதில் பயிற்சியாளராக தேர்வு செய்யப்பட்டார்.
இவருடைய வருகைக்குப்பின் பாகிஸ்தான் அணி மிகவும் சிறப்பாக செயல்பட்டு சவுத் ஆப்பிரிக்கா மற்றும் இலங்கைக்கு எதிரான தொடரில் வெற்றி பெற்றது, இதன் காரணமாக பாகிஸ்தான் அணியின் வெற்றிகரமான பயிற்சியாளராக செயல்படும் மிஸ்பா உள் ஹக்கிற்கு 1.79 கோடி சம்பளமாக வழங்கப்படுகிறது