கிரிக்கெட் உலகில் பாகிஸ்தான் மற்றும் இந்தியாவுக்கு இடையிலான போட்டி எவ்வாறு சுவாரஸ்யமாகவும் விறுவிறுப்பாகவும் இருக்குமோ அந்த அளவு இந்தியா மற்றும் ஆஸ்திரேலியாவுக்கு இடையிலான போட்டியும் மிகவும் சுவாரசியமாக இருக்கும்.
எந்த ஒரு பேட்ஸ்மேனாக இருந்தாலும் ஒரு ரன் கூட எடுக்காமல் டக் அவுட் முறையில் அவுட் ஆவது மிக கவலையான விசயமாகும்.
நாம் இங்கு 5 சிறந்த இந்திய வீரர்கள் ஆஸ்திரேலியாவுக்கு எதிரான டெஸ்ட் போட்டியில் டக்-அவுட் முறையில் அவுட் ஆனவர்களைப் பற்றி பார்க்க உள்ளோம்.
ஹர்பஜன் சிங்-(6)
இந்திய அணி முன்னாள் சுழற்பந்து ஜாம்பவானான ஹர்பஜன் சிங் பந்துவீச்சில் பல சாதனைகளை ஆஸ்திரேலியாவுக்கு எதிராக படைத்துள்ளார்.
இவர் பேட்டிங்கிலும் ஓரளவு சிறப்பாக செயல்படக்கூடிய வீரர். இவர் 103 டெஸ்ட் போட்டியில் பங்கேற்று 2 சதமும் ஒன்பது அரை சதமும் அடித்துள்ளார்.
இதில் ஆஸ்திரேலியாவுக்கு எதிராக 17 டெஸ்ட் போட்டியில் பங்கேற்று 341 ரன்கள் அடித்துள்ளார். இருந்தபோதும் ஆஸ்திரேலியாவுக்கு எதிரான போட்டியில் 6 முறை டக்-அவுட் முறையில் அவுட்டானார். இதுவரை ஹர்பஜன் சிங்க் மொத்தம் 19 முறை டக்-அவுட் முறையில் ரன் ஏதும் எடுக்காமல் அவுட் ஆகியுள்ளார்.
பக்வாத் சந்திரசேகர்.(6)
இந்திய அணியின் ஜாம்பவானான சந்திரசேகர் ஒரு லெக்-ஸ்பின்னர் . இவர் சொல்லிக்கொள்ளும் அளவுக்கு பேட்டிங்கில் சிறப்பாக செயல்படவில்லை .
இவர் 58 டெஸ்ட் தொடரில் பங்கேற்று 167 ரன்கள் மட்டுமே எடுத்துள்ளார் அதில் 23 முறை டக்-வுட்முறையில்அவுட்டாகியுள்ளார். குறிப்பாக ஆஸ்திரேலியாவுக்கு எதிராக 6 டக்-அவுட்கியுள்ளார்.
ஜாகிர் கான் 7
இந்திய அணியின் முன்னாள் இடதுகை பந்து வீச்சாளரான ஜாகீர்கான் ஒரு மிகச் சிறந்த வீரராக திகழ்ந்த பந்துவீச்சில் மிக அபாரமாக செயல்பட்டாலும் பேட்டிங்கில் இவர் சிறந்து விளங்கவில்லை.
இவர் ஆஸ்திரேலியாவுக்கு எதிராக 7முறை டக்-அவுட் என்ற முறையில் அவுட்டாகியுள்ளார்.ஆஸ்திரேலியாவுக்கு எதிராக மொத்தம் 15 டெஸ்ட் போட்டிகளில் பங்கேற்று 166 ரன்கள் மட்டுமே எடுத்துள்ளார்.
இவர் மொத்தம் 29 முறை டக்-அவுட் ஆகியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
அஜித் அகார்கர் 8
இந்திய அணி முன்னர் வீரரான அஜித் அகார்கர் ஒரு மிகச் சிறந்த வேகப்பந்து வீச்சாளர் ஆவார். இவர் ஆஸ்திரேலியாவுக்கு எதிராக 9 போட்டிகளில் விளையாடி உள்ளார் அதில் எட்டு முறை டக் அவுட் ஆகி உள்ளார் .
ஆஸ்திரேலியாவுக்கு எதிராக தொடர்ந்து 7 போட்டிகளில் டக்-அவுட் ஆனது குறிப்பிடத்தக்கது. இதனால் இவருக்கு ”பாம்பே வாத்து” என்ற அடைமொழியும் உள்ளது. இவர் மொத்தம் 14 டெஸ்ட் போட்டிகளில் பங்கேற்று 60 ரன்கள் மட்டுமே எடுத்துள்ளார்.
இஷாந்த் சர்மா-12
இந்திய அணி வலது கை வேகப்பந்து வீச்சாளரான இஷாந்த் சர்மா ஆஸ்திரேலியாவுக்கு எதிராக பந்துவீச்சில் பல சாதனைகளை படைத்துள்ளார். இருந்தபோதும் பேட்டிங்கில் ஆஸ்திரேலியாவுக்கு எதிராக சிறப்பாக செயல்படவில்லை.
இவர் ஆஸ்திரேலியாவுக்கு எதிராக 17 போட்டிகளில் பங்கேற்று 12 முறை டக்-அவுட் ஆகியுள்ளார். அதில் தொடர்ந்து ஆறு முறை தொடங்கியது குறிப்பிடத்தக்கது.
இவர் ஆஸ்திரேலியாவுக்கு எதிராக பங்கேற்ற போட்டிகளில் மொத்தம் 142 ரன்களை எடுத்துள்ளார். அதிகபட்சமாக ஒரு போட்டியில் 31 ரன்கள் எடுத்துள்ளார்.இவர் மொத்தமாக டெஸ்ட் போட்டிகளில் 31 முறை டக் அவுட் ஆகி உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது