இந்த ஐ.பி.எல் தொடருடன் டாட்டா சொல்ல காத்திருக்கும் ஐந்து முக்கிய வீரர்கள் !!

2020 ஐபிஎல் போட்டியில் இருந்து 5 வீரர்கள் தனது ஓய்வை அறிவிப்பார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது…

ஐபிஎல் கிரிக்கெட் தொடர் வளர்ந்து வரும் இளம் இளைஞர்களின் திறமையை வெளிப்படுத்துவதற்கான ஒரு முக்கிய கருவியாக திகழ்கிறது.

இந்த வருட ஐ.பி.எல் தொடரானது அடுத்த சில தினங்களில் துவங்க உள்ள நிலையில், இந்த ஐ.பி.எல் தொடருடன் உள்ளூர் தொடர்களில் இருந்தும் ஓய்வை அறிவிக்க வாய்ப்புகள் உள்ள ஐந்து வீரர்கள் குறித்து இங்கு பார்ப்போம்.

#5. ஹர்பஜன் சிங்.

இந்திய அணியின் சுழற்பந்து வீச்சாளர் மேலும் சிஎஸ்கே வின் செல்லப்பிள்ளை என்றும் அழைக்கலாம், அந்த அளவிற்கு தமிழ் பேசும் அனைத்து மக்களையும் கவர்ந்து இழுத்தவர்.

கடந்தமுறை நடந்த ஐபிஎல் போட்டியில் 11 போட்டியில் பங்கேற்று 16 விக்கெட்டுகளை வீழ்த்தினார் பறை இக்கட்டான சூழ்நிலையையும் சிறப்பாக பந்து வீசினார்.

ஹர்பஜன் சிங் சர்வதேச போட்டிகளில் பங்கேற்க விட்டாலும் ஐபிஎல் தொடரில் இவருடைய செயல்பாடு மிகவும் பிரமிக்க வைத்தது.

இருந்தபோதும் 2020 ஐபிஎல் சீசனில் இவர் ஓய்வு பெறுவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

தனிப்பட்ட காரணங்கள் காரணமாக ஹர்பஜன் சிங் இந்த தொடரில் இருந்தே விலகியுள்ளதால், இனி ஹர்பஜன் சிங்கை களத்தில் பார்க்க முடியாமல் போக வாய்ப்புகள் உள்ளன.

#4 டேல் ஸ்டெயின்.

சவுத் ஆப்பிரிக்காவின் அதிவேகமான பந்துவீச்சாளர் இக்கட்டான நேரத்தில் சிறப்பாகவும் துல்லியமாகவும் பந்துவீச கூடியவர்.

கடந்தாண்டு 2019 இல் நடைபெற்ற ஐபிஎல் போட்டியில் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் அணிக்காக இரண்டு மேட்ச் மட்டுமே விளையாண்டாள். தோள்பட்டை பிரச்சனையால் அந்த சீசனில் இருந்து வெளியேறினார்.

ஸ்டைனை பல கோடிகள் கொடுத்து தனது அணிக்காக தேர்வு செய்வதில் பல அணிகளும் போட்டி போட்டுக் கொண்டு இருக்கிறது. இருந்தபோதும் வயது மற்றும் உடற்தகுதி ஆகிய காரணத்தால் இந்த ஆண்டு 2020 இவர்களில் இருந்து ஓய்வு பெறுவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

#3 ஷேன் வாட்சன்.

ஆஸ்திரேலியாவின் நட்சத்திர வீரரான ஷேன் வாட்சன் ஒரு அற்புதமான ஆல்ரவுண்டர். இவர் ராஜஸ்தான் அணிக்காக 2008 மட்டும் 2013 டைடல் பட்டத்தை பெற்றுத் தந்தவர்.

பின் சில காரணத்தால் பந்து வீசுவதை நிறுத்திக் கொண்ட இவர் பேட்டிங்கில் தனது முழு கவனத்தையும் செலுத்தினார் 2018 சிறப்பாக செயல்பட்ட இவர் 2019இல் சிஎஸ்கே அணிக்காக விளையாடினார், ஆனால் எதிர்பார்த்த அளவிற்கு இவரால் சிறப்பாக செயல்பட முடியவில்லை.

#2 கிறிஸ் கேய்ல்.

யுனிவர்ஸ் பாஸ் என்று கிரிக்கெட் உலகத்தினரால் அழைக்கப்படுபவர். ஐபிஎல் போட்டியில் பல சாதனைகளை படைத்தவர், ஐபிஎல் போட்டியில் 4000 மேற்பட்ட ரன்களை குவித்தவர் போன்ற பல சாதனைகளை பெற்றவர்.

இவருடைய ஸ்ட்ரைக் ரேட் 151.02. கடந்த சில சீசன்களில இவரால் முன்பைப் போல் செயல்பட முடியவில்லை ஏற்கனவே இவருக்கு 40 வயதைத் தாண்டி விட்டதால் இவர் மேல் பல சர்ச்சைகள் கிளம்பியது.

எனவே இந்த ஆண்டுடன் இவர் ஐபிஎல் போட்டியில் இருந்து ஓய்வு பெறுவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

#1 லசித் மலிங்கா

யாக்கர் கிங் என்று அழைக்கும் அளவிற்கு பவுலிங்கில் சிறந்து விளங்கிய லசித் மலிங்கா மும்பை அணிக்காக பல முறை சிறப்பாக செயல்பட்டு அணிக்கு வெற்றியை தேடிக் கொடுத்தார். கடந்தாண்டு இவருடைய பந்துவீச்சால் மும்பை அணி வெற்றி பெற்றது என்றும் கூறும் அளவிற்கு இவருடைய பந்துவீச்சு இருந்தது.

இவர் 122 ஐபிஎல் போட்டிகளில் பங்கேற்று 170 விக்கெட்களை வீழ்த்தியுள்ளார் இவருடைய ஆவரேஜ் 19.82. மும்பை இந்தியன்ஸ் அணி நாலாவது முறை டைட்டில் பட்டத்தை வெல்வதற்கு இவருடைய பங்களிப்பு முக்கியமான ஒன்றாகும்.

இருந்தபோதும் 2020இல் இவர் ஐபிஎல் இல் இருந்து ஓய்வு பெறுவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

Mohamed:

This website uses cookies.