2008 ஆம் ஆண்டு துவங்கிய ஐபிஎல் தொடர் மெதுமெதுவாக பல நாட்டு வீரர்கள் வெகுவாக ஈர்த்துள்ளது. இந்திய வீரர்கள் மட்டுமல்லாது வெளிநாட்டு வீரர்களும் தங்களது சர்வதேச அணிகளில் இடம் பெற ஐபிஎல் தொடர் ஒரு பாலமாக அமைகிறது. தங்களது சர்வதேச அணிகளுக்கு ஆடி பிறகு இடத்தை தவறவிட்ட வீரர்களுக்கும் மீண்டும் அணியில் இடம்பிடிக்க ஐபிஎல் தொடர உதவுகிறது.
இந்நிலையில், அறிமுக ஐபிஎல் தொடரில் களமிறங்கி அதிக ரன் குவித்த வீரர்களின் பட்டியலை நாம் இங்கு காண இருக்கிறோம். ( இப்பட்டியலில் 2008 ஆம் ஆண்டு ஐபிஎல் தொடர் கணக்கில் கொள்ளப்படாது)
# 5 ராகுல் திரிபாதி – 391 ரன்கள் (2017)
2017 ஆம் ஆண்டு ஐபிஎல் தொடருக்கு அறிமுகமாகி ரைசிங் புனே சூப்பர் ஜெய்ண்ட்ஸ் அணியில் துவக்க வீரராக களமிறங்கி சிறப்பாக ஆடிக் கொடுத்தார் ராகுல் திரிபாதி. இவர் 2017 ஆம் ஆண்டு ஐபிஎல் தொடரில் 391 ரன்கள் குவித்தார். இது அறிமுக ஐபிஎல் தொடரில் அதிக ரன்கள் குவித்தவர்கள் பட்டியலில் ஐந்தாவது அதிகபட்சமாக இருக்கின்றது. தற்போது ராஜஸ்தான் ராயல்ஸ் அணிக்காக ஆடி வருகிறார்.