கோடிகளை குவிக்கும் டாப் 5 உள்ளூர் டி.20 தொடர்கள்
விளையாட்டு உலகில் கிரிக்கெட் தோன்றிய காலத்தில் இருந்தே டெஸ்ட் மற்றும் ஒருநாள் போட்டிகளை மட்டுமே பல ஆண்டுகளாக பார்த்து வெறுத்து போன கிரிக்கெட் ரசிகர்களுக்கு வரப்பிசாதமாக வந்தது தான் 20 ஓவர் போட்டிகள்.
டி.20 போட்டிகள் ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்றதை தொடர்ந்து இந்திய கிரிக்கெட் வாரியமான பி.சி.சி.ஐ., கடந்த 2008ம் ஆண்டு ஐ.பி.எல் தொடர் என்னும் உள்ளூர் டி.20 தொடரை உலகிற்கு அறிமுகப்படுத்தியது. இந்த தொடருக்கு ரசிகர்கள் மத்தியில் மிகப்பெரும் வரவேற்பை அடுத்து ஆஸ்திரேலியா, பாகிஸ்தான் மற்றும் மேற்கிந்திய தீவுகள் உள்ளிட்ட பல நாடுகள் தங்கள் நாடுகளிலும் உள்ளூர் டி.20 தொடர்களை நடத்தி கோடி கணக்கில் வருவாய் ஈட்டி வருகின்றனர்.
அந்த வகையில் உலகளவில் நடக்கும் உள்ளூர் டி.20 தொடர்களில் அதிக வருவாய் தரக்கூடிய டாப் 5 தொடர்களை பற்றி இங்கு பார்ப்போம்.
5., பாகிஸ்தான் சூப்பர் லீக்
ஐ.பி.எல் தொடரை போல் அப்படியே காப்பி அடித்து பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியத்தால் நடத்தப்படும் உள்ளூர் டி.20 தொடர் தான் பாகிஸ்தான் சூப்பர் லீக்.
கடந்த மூன்று வருடங்களாக நடத்தப்பட்டு வரும் இந்த தொடரில் மொத்தம் ஆறு அணிகள் பங்கேற்று விளையாடி வருகின்றன.
அணிகளின் பெயர்கள்;
பெஸ்வார் ஜல்மி
கராச்சி கிங்ஸ்
இஸ்லாமாபாத் யுனைடெட்
குவாட்டா கிளேடியேட்டர்ஸ்
முல்தான் சுல்தான்
லாகூர் குலாண்டர்ஸ்
முதல் இரண்டு தொடர்களில் ரசிகர்கள் மத்தியில் இந்த தொடருக்கு ஒரளவு ஆதரவு கிடைத்தாலும் சமீபத்தில் மூன்றாவது சீசனில் பாகிஸ்தான் சூப்பர் லீக் ஒட்டுமொத்தமாக ரசிகர்களின் ஆதரவை இழந்தது. பெரும்பாலான போட்டிகள் ஆள் இல்லாத மைதானத்திலேயே நடைபெற்றன.
4., கரீபியன் ப்ரீமியர் லீக்;
மேற்கிந்திய தீவுகள் கிரிக்கெட் வாரியத்தால் கடந்த 2013ம் ஆண்டில் இருந்து நடத்தப்படும் இந்த கரீபியன் ப்ரீமியர் லீக் தொடர் பெண்களின் கவர்ச்சி நடனத்தின் மூலம் மேற்கிந்திய தீவு ரசிகர்களிடம் பெரும் வரவேற்பை பெற்றது.
மொத்தம் 15 நாடுகளில் தொலைக்காட்சி மூலம் ஒளிபரப்பாகு இந்த தொடர் ஒரு வருடத்திற்கு 208 மில்லியன் டாலர் வரை வருவாய் ஈட்டுகிறது.