ஐ.பி.எல் 2018; அதிக ரன்கள் குவித்துள்ள டாப் 5 வீரர்கள் பட்டியல்
கடந்த ஏப்ரல் மாதம் 7ம் தேதி துவங்கிய ஐ.பி.எல் டி.20 தொடரின் 11வது சீசனின் லீக் போட்டிகள் நேற்றோடு முடிவடைந்தது.
இதில் கேன் வில்லியம்சன் தலைமையிலான ஹைதராபாத் அணி, தோனி தலைமையிலான சென்னை சூப்பர் கிங்ஸ் அணி, தினேஷ் கார்த்திக் தலைமையிலான கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி மற்றும் ரஹானே தலைமையிலான ராஜஸ்தான் ராயல்ஸ் அணிகள் லீக் தொடரில் அதிக வெற்றிகள் பெற்று புள்ளி பட்டியலில் முதல் நான்கு இடத்தில் இருந்ததன் மூலம் ப்ளே ஆஃப் சுற்றுக்கு தகுதி பெற்றுள்ளன.
இந்நிலையில் இந்த தொடரில் இதுவரை அதிக ரன்கள் குவித்துள்ள டாப் 5 வீரர்கள் பட்டியலை இங்கு பார்ப்போம்.
5., ஜாஸ் பட்லர்;
ராஜஸ்தான் ராயல்ஸ் அணியின் மிடில் ஆர்டரில் களமிறங்கி தொடர்ந்து சொதப்பிய பட்லர், கடைசி சில போட்டிகளில் துவக்க வீரராக களமிறங்கி தொடர்ச்சியாக ஐந்து போட்டிகளில் அரைசதம் கடந்து பல சாதனைகள் படைத்தார். ராஜஸ்தான் ராயல்ஸ் அணி தற்போது ப்ளே ஆஃப் சுற்றுக்கு தகுதி பெற்றுள்ளதற்கு மிக முக்கிய காரணமாக திகழ்ந்த ஜாஸ் பட்லர் இதுவரை விளையாடியுள்ள 13 போட்டிகளிலும் சேர்த்து 548 ரன்கள் எடுத்து இந்த பட்டியலில் 5வது இடத்தில் உள்ளார்.