நேற்று உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் போட்டி நடைபெற்றது. முதலில் பேட்டிங் செய்த இந்திய அணி 3 விக்கெட் இழப்பிற்கு ஆட்ட முடிவில் 146 ரன்கள் குவித்தது. ரோகிட் ஷர்மா 34 ரன்கள், கில் 28 ரன்கள் மற்றும் புஜாரா 8 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தனர். விராட் கோலி (44) மற்றும் அஜின்க்யா ரஹானே(29) மிக சிறப்பாக விளையாடி வருகின்றனர்.
நேற்று முதல் முறையாக இந்திய கிரிக்கெட் வீரர் தினேஷ் கார்த்திக் சர்வதேச போட்டிகளில் கிரிக்கெட் வர்ணனையாளராக செயல்பட்டார். குறிப்பாக நாசர் ஹூசைனை தினேஷ் கார்த்திக் தன்னுடைய பதில் மூலம் நேற்று திக்குமுக்காட வைத்தார். அது அனைத்து இந்தியர்களையும் ஆரவாரப் படுத்தியது குறிப்பிடத்தக்கது.
கிரிக்கெட் வர்ணனையாளராக தினேஷ் கார்த்திக்
கிரிக்கெட் வர்ணனையாளர் ஆக தன்னுடைய பணியை சிறப்பாக தினேஷ் கார்த்திக் செய்து வருகிறார். குறிப்பாக இறுதிப்போட்டியில், மழை காரணமாக போட்டி நடைபெற அதே நேரத்தில் தன்னுடைய பேச்சின் மூலம் ரசிகர்களை உற்சாகப்படுத்துவது, போட்டி நடக்கும் வேளையில் மிக சிறப்பாக தன்னுடைய வர்ணனையாளர் வேலையை செய்வது என தினேஷ் கார்த்திக் இந்திய ரசிகர்கள் மட்டுமின்றி அனைத்து ரசிகர்கள் மத்தியில் பெரிதாகப் பேசப் பட்டார்.
நாசர் ஹூசைனை தன்னுடைய பதில் மூலம் அடக்கிய தினேஷ் கார்த்திக்
போட்டி நடைபெற்றுக் கொண்டிருக்கும் வேளையில் நாசர் ஹூசைன் ரோகித் சர்மா மிகச்சிறப்பாக புல் ஷாட்டுகளை ஆடுவார். தன்னுடைய கால்களை மிக சிறப்பாக பயன்படுத்தி ஸ்பின் பந்து வீச்சுக்கு எதிராக அற்புதமாக விளையாடுவார் என்றும், அதில் அவர் கைதேர்ந்தவர் என்றும் நாசர் பூசையின் கூறியிருந்தார்.
பதிலுக்கு தினேஷ் கார்த்திக் ஒரே வரியில், ஆமாம் உங்களுக்கு நேர்மாறாக அவர்களே ஆடுவார் என்று நகைச்சுவை துணியில் தன்னுடைய நக்கலான பதிலைக் கூறினார். அவருடைய நக்கலான பேச்சு அனைத்து இந்திய ரசிகர்களை உற்சாகப்படுத்தியது. அவர் கூறிய இந்த பதில் ட்விட்டர் வலைதளத்தில் ட்ரெண்டிங் ஆனது குறிப்பிடத்தக்கது.
இந்திய ஜாம்பவான் கிரிக்கெட் வர்ணனையாளர் ஹர்ஷ போக்ளே தினேஷ் கார்த்திக் தனது முதல் கிரிக்கெட் போட்டியில் மிக சிறப்பாக போட்டியை வர்ணனை செய்வது பார்க்க அற்புதமாக இருக்கிறது என்று பதிவிட்டார். மேலும் நிறைய இந்திய ரசிகர்கள் தினேஷ் கார்த்திக் மிக சிறப்பாக போட்டியை வர்ணனை செய்கிறார் என்றும் அவரை பாராட்டி தள்ளிய வண்ணம் இருந்தார்கள்.