பேட்ஸ்மேன்களுக்கு எவ்வாறு சதம் அடிப்பது ஒரு மகிழ்ச்சிகரமான மற்றும் சாதனையான விசயமே, அதே போல் பந்துவீச்சாளர்கள் 5 விக்கெட்கள் அல்லது அதற்கு மேல் எடுப்பது அவர்களுக்கு மகிழ்ச்சியான மற்றும் சாதனையான விஷயமாகும். ஒரு போட்டியின் ஒரு பவுலர் 5 விக்கெட்கள் எடுத்துவிட்டால் அதிகபட்ச வெற்றிப வாய்ப்பு அந்த அணிக்கு கிடைக்கும்.
அந்த வகையில் ஒரே போட்டியில் 5 விக்கெட்டுகளை அதிக முறை கைப்பற்றிய டாப் 5 வீரர்கள் குறித்து இங்கு பார்ப்போம்.
வக்கார் யூனுஸ் (பாகிஸ்தான்)-13
பாகிஸ்தான் அணியின் பாகிஸ்தான் அணியின் முன்னாள் நட்சத்திர வீரர் வக்கார் யூனிஸ் ஒரு மிகப்பெரிய வேகப்பந்து வீச்சாளர் . இவர் இதுவரை 14 வருடம் பாகிஸ்தான் சர்வதேச கிரிக்கெட் போட்டியில் பங்கேற்று உள்ளார். இவர் விளையாண்ட காலகட்டத்தில் இவர் பந்துவீச்சை சமாளிப்பது பேட்ஸ்மேன்கள் மத்தியில் ஒரு மிகப் பெரிய சவாலாகவே இருக்கும்.
1990களில் வாசிம் அக்ரம் மற்றும் வக்கார் யூனிஸ் சிறப்பான பந்துவீச்சால் பாகிஸ்தான் அணி மிகவும் பலம் வாய்ந்த அணியாக திகழ்ந்தது.
வக்கார் ஒயிட் பால் வீசுவதில் வல்லவர், புது மற்றும் மற்றும் பழைய பந்துகளை ஸ்விங் செய்வதில் கெட்டிக்காரர். 50 ஓவர் போட்டியில் இவரது பங்களிப்பு பாகிஸ்தான் அணிக்கு மிகவும் முக்கியமான ஒன்றாகவே திகழ்ந்தது , இவர் ஒருநாள் போட்டித் தொடர்களில் அதிகமான விக்கெட்டுகளை வீழ்த்தியவர் பட்டியலில் மூன்றாம் இடத்தில் உள்ளார்.இவர் 1989 முதல் 2003 வரை ஓடிய தொடர்களில் பங்கேற்று மொத்தம் 262 போட்டிகள் விளையாண்டு அதில் 416 விக்கெட்களை வீழ்த்தியுள்ளார், அதில் 13 முறை ஐந்து அல்லது அதற்கு மேலான விக்கெட்டுகள் எடுத்துள்ளார்.
2011இல் இங்கிலாந்துக்கு எதிரான போட்டியில் இவர் 36 ரன்கள் மட்டுமே கொடுத்து 7 விக்கெட்டுகளை வீழ்த்தினார் அந்தப் போட்டியில் இவரது எக்கனாமி ரேட் 4.68 ஆகும்.
முத்தையா முரளிதரன் (இலங்கை)-10
கிரிக்கெட் ஜாம்பவான் முத்தையா முரளிதரன் இலங்கை அணிக்காக தனது சர்வதேச கிரிக்கெட் தொடரை தொடங்கினார். தமிழகத்தில் பிறந்த இவர் இங்கு வாய்ப்பு கிடைக்காததால் இலங்கையில் விளையாட திட்டமிட்டார்.
இவரின் மாய பந்துவீச்சால் டெஸ்ட் தொடரில் மொத்தம் 800 விக்கெட்டுகளை வீழ்த்தியுள்ளார். டெஸ்ட் போட்டிகளில் அதிகமாக விக்கெட்டுகளை வீழ்த்தியவர் என்ற சாதனையை படைத்துள்ளார். மேலும் இவர் ODI இல் சிறப்பாக செயல்பட்டு 534 விக்கெட்டுகளை வீழ்த்தியுள்ளார் அவருடைய பந்துவீச்சை சமாளிப்பதற்கு பேட்ஸ்மேன்களுக்கு பெரும் சவாலாகவே இருக்கும். இவர் அனைத்து விதமான பிட்ச் கண்டிஷன் களிலும் பந்து வீசுவதில் திறமைப்படைத்தவர்.
இவர் ஒருநாள் போட்டித் தொடர்களில் அதிகமான விக்கெட்டுகளை வீழ்த்தியவர்கள் பட்டியலில் இரண்டாவது இடத்தில் உள்ளார். முத்தையா முரளிதரன் 350 ஒருநாள் போட்டிகளில் பங்கேற்று மொத்தம் 10 முறை ஐந்து விக்கெட்டுகள் அல்லது அதற்கு மேல் எடுத்துள்ளார்.
இவரின் மாய பந்துவீச்சால் பலமுறை இலங்கை அணி வெற்றி பாதையை நோக்கி பயணித்துள்ளது. இவருடைய எக்கனாமிக் ரேட் 3.93 ஆகும். 2000இல் நடைபெற்ற ஐசிசி சாம்பியன் டிராபி தொடரில் இலங்கை மற்றும் இந்தியா இடையில் ஆட்டம் விறுவிறுப்பாக நடைபெற்றது. அதில் முத்தையா முரளிதரன் 30 ரன்கள் மட்டுமே விட்டுக்கொடுத்து 7 விக்கெட்டுகளை வீழ்த்தி இருந்தார். அதுமட்டுமில்லாமல் இவர் ஒரு நாள் போட்டிகளில் 15 முறை 4 விக்கெட்களை வீழ்த்தியுள்ளார்.
பிரட் லீ (ஆஸ்திரேலியா), ஷாகித் அப்ரிடி (பாகிஸ்தான்)-9
5 அல்லது அதற்கு மேலான விக்கெட்களை வீழ்த்தி அவர்கள் பட்டியலில் பிரெட் லீ மற்றும் ஷாகித் அப்ரிடி மூன்றாவது இடத்தில் உள்ளார்கள்.
இவர்கள் இருவருமே கிரிக்கெட் வரலாற்றில் மறக்கமுடியாத வீரர்களாக திகழ்ந்துள்ளனர்.
ஆஸ்திரேலியாவின் முன்னாள் நட்சத்திர பந்து வீச்சாளரான பிரெட் லீ ஒருநாள் போட்டித் தொடர்களில் 9 முறை 5 அல்லது அதற்கு மேலான விக்கெட்டுகளை வீழ்த்தியுள்ளார். இவருடைய வேகமான பந்துவீச்சு பேட்ஸ்மேனை தடுமாற வைக்க கூடிய அளவிற்கு மிகவும் துல்லியமாக இருக்கும்.
இவர் விளையாண்ட காலகட்டத்தில் இவர் பேட்ஸ்மேன்களுக்கு சிம்மசொப்பனமாக திகழ்ந்தார். இவர் 2000 முதல் 2012 வரை ஆஸ்திரேலியா அணிக்காக விளையாடியுள்ளார். இவருடைய எக்கனாமிக் ரேட் 4.76 ஆகும்.
பாகிஸ்தான் அணியின் முன்னாள் ஜாம்பவான் ஷாகித் அப்ரிடி ஒரு மிகச் சிறந்த ஆல்ரவுண்டர் ஆவார் இவருக்கு ரசிகர்கள் மத்தியில் அதிகமான வரவேற்பு இருந்தது. இவரின் பேட்டிங் மற்றும் பௌலிங் ஸ்டைல் பார்ப்பதற்கு மனதை கவரும் வகையில் இருக்கும்.
இவர் தனது வாழ்க்கையில் 19 வருடம் பாகிஸ்தான் அணிக்காக விளையாடியுள்ளார், இவர் மொத்தம் 378 ஒருநாள் போட்டி தொடரில் பங்கேற்று 9 முறை ஐந்து அல்லது அதற்கு மேலான விக்கெட்களை வீழ்த்தியுள்ளார் இவருடைய எக்கனாமிக் ரேட் 4.62ஆகும்.
2013இல் வெஸ்ட் இண்டீசுக்கு எதிராக நடைபெற்ற போட்டியில் இவர் 12 ரன்கள் மட்டுமே விட்டுக்கொடுத்து 7 விக்கெட்டுகளை வீழ்த்தியுள்ளார்.
லசித் மலிங்கா (இலங்கை) -8
5 அல்லது அதற்கு மேலான விக்கெட்டுகளை வீழ்த்தியவர்கள் பட்டியலில் லசித் மலிங்கா நான்காவது இடத்தில் உள்ளார்.
இவருடைய தனித்துவமான பந்துவீச்சு பார்ப்பவர்களின் மனது ஈர்க்கக்கூடிய வகையில் இருக்கும் இவருடைய பந்துவீச்சை சமாளிப்பதற்கு அனைத்து பேட்ஸ்மேன்களில் திணறுவார்கள் அந்த அளவுக்கு இவருடைய பந்துவீச்சில் வேரியேஷன் அதிகமாக இருக்கும்.
இவருடைய துல்லியமான யார்க்கர் பந்துவீச்சால் பலமுறை பேட்ஸ்மேன்களை தடுமாற செய்துள்ளார் இவரைப் பற்றி சொல்லப்போனால் சொல்லிக்கொண்டே போகலாம் அந்த அளவுக்கு இவருடைய ஆட்டம் மிக அற்புதமாக இருக்கும் 2004 இலங்கை அணிக்காக அறிமுகமான லசித் மலிங்கா கிரிக்கெட் வரலாற்றில் தனக்கென ஒரு தனி முத்திரையை பதித்துக் கொண்டார் இவருடைய திறமையால் பல முறை இலங்கை அணி வெற்றி பெற்றுள்ளது. இவர் 226 ஒருநாள் போட்டித் தொடரில் பங்கேற்று 338 விக்கெட்களை வீழ்த்தியுள்ளார்.
2011ல் நடந்த உலக கோப்பை தொடரில் கென்யாவுக்கு எதிராக 38 ரன்கள் மட்டுமே கொடுத்து 6 விக்கெட்டுகளை வீழ்த்தி இருந்தார் இவருடைய பெருமுயற்சியால் அந்த வருடம் இலங்கை அணி பைனலுக்கு முன்னேறியது. இவர் 8 முறை ஐந்து அல்லது அதற்கு மேலான விக்கெட்களை வீழ்த்தியுள்ளார்.
மிச்செல் ஸ்டார்க் (ஆஸ்திரேலியா) கிளன் மெக்ராத் (ஆஸ்திரேலியா)-7
வேகப்பந்துவீச்சில் பிரசித்தி பெற்ற ஆஸ்திரேலியா அணி இதுவரை மிக அற்புதமான வேகப்பந்து வீச்சாளர்களை கிரிக்கெட் உலகிற்கு அறிமுகப்படுத்தி உள்ளது 70களில் ஜெஃப் தாம்சனிலிருந்து, கிளென் மெக்ராத், பிரட் லீ மற்றும் தற்போது ஆஸ்திரேலிய அணிக்காக விளையாடிக் கொண்டிருக்கிற மிட்செல் ஸ்டார்க் போன்ற பல அற்புதமான வேகப்பந்து வீச்சாளர்களை அறிமுகப்படுத்தியுள்ளது.
ஐந்து அல்லது அதற்கு மேலான விக்கெட்களை வீழ்த்தி அவர்கள் பட்டியலில் கிளென் மெக்ராத் மற்றும் மிச்செல் ஸ்டார்க் 5வது இடத்தில் உள்ளனர்.
ஆஸ்திரேலிய அணியின் முன்னாள் நட்சத்திர வீரர் கிளென் மெக்ராத் 250 ஒருநாள் போட்டித் தொடர்களில் பங்கேற்று ஏழு முறை ஐந்து அல்லது அதற்கு மேலான விக்கெட்களை வீழ்த்தியுள்ளார். 1993 முதல் 2007 வரை ஆஸ்திரேலியா அணிக்காக விளையாடியுள்ளார்.
30 வயதான மிட்செல் ஸ்டார்க் ஆஸ்திரேலிய அணியின் நட்சத்திர பந்துவீச்சாளர் ஆக திகழ்கிறார் இவர் சாதாரணமாக 160 kmph வேகத்தில் பந்து வீச கூடியவர், இவர் வெறும் 90 ஒருநாள் போட்டிகளில் பங்கேற்று 7 முறை ஐந்து அல்லது அதற்கு மேலான விக்கெட்களைன்வீழ்த்தியுள்ளார்.
2015இல் நியூசிலாந்துக்கு எதிரான ஒருநாள் போட்டியில் 28 ரன்கள் மட்டுமே விட்டுக்கொடுத்து 6 விக்கெட்டுகளை வீழ்த்தி இருந்தார்.