1900களில் 50 ஓவர் போட்டிகள் சலுப்பு தட்டிபோக, எப்படி டெஸ்ட் போட்டியில் சுவாரஸ்யத்தை ஏற்படுத்த ஓவர் மற்றும் நேரத்தைக் குறைத்து 50 ஓவர் போட்டிகள் அரங்கேறியதோ, அதே போல் தான் 50ஒவர் போட்டிகளை தாண்டி டி20 போட்டிகள் உருவாக்கப்பட்டது.
ஒவ்வொரு இன்னிங்டிக்கும் குறந்தது 3 மணி நேரம் காத்திருக்க வேண்டிய நேரத்தில் ஒரு போட்டியையே முடித்து சுவாரஸ்ய முடிவை கொடுக்கவல்லது இந்த டி20 ஃபார்மட் போட்டிகள்.
முதன் முறையாக இங்கிலாந்து மற்றும் வேல்ஸ் கிரிக்கெட் வாரியம் 2003ஆம் ஆண்டு கவுன்ட்டி போட்டிகளில் தோழில் முறையாக டி20 போட்டிகளை வைத்து ஆடியது. அன்று துவங்கியது தான் டி20 புரட்சி.
பின்னர் டி20 போட்டிகளுக்கான வரவேற்பை உணர்ந்த ஒரு தனியார் தொலைக்காட்சி இந்தியாவில் இந்தியன் கிரிகெட் லீக் (ICL) என்ற டி20 லீக்கை ஆரம்பிக்க, அது அமோக வரவேற்ப்பை பெற்றது மட்டுமில்லாமல், வர்த்தக ரீதியாகவும் லாபம் ஈட்டித்த தந்தது. இதனைக் கண்டு பயந்து போன பி.சி.சி.ஐ அந்த டி20 லீக்கை தடை செய்தது.
பின்னர் உறுவாந்து தான் ‘பெரு முதலை’ ஐ.பி.எல். அதன் பின்னர் ஐ.பி.எல் யை பார்த்து உருவானது தான் மற்ற நாடுகளின் லீக் போட்டிகள்.
சர்வதேச அளவில் முதல் டி20 உலகக்கோப்பை 2007ஆம் ஆண்டு நடைபெற்றது. இதுவரை 6 உலககோப்பை போட்டிகள் நடந்து முடிந்து விட்டது. தற்போது சரவதேச அளவில் அதிக டி20 போட்டிகளை வென்றுள்ள அணிகளைப் பார்ப்போம்.