உலகக்கோப்பையில் கலக்கப்போகும் டாப்-5 பேட்ஸ்மேன்கள்!!

Prev1 of 5
Use your ← → (arrow) keys to browse
ஒவ்வொரு உலக கோப்பை கிரிக்கெட் போட்டியிலும் குறிப்பிட்ட வீரர்களின் ஆட்டங்களை பார்க்க ரசிகர்கள் தவம் கிடப்பார்கள். அந்த வகையில் இந்த உலக கோப்பையிலும் ஒரு சில வீரர்களின் ஆட்டம் கவனத்தை ஈர்க்கும்.
அத்தகைய வீரர்கள் பற்றி ஒரு பார்வை:-
விராட் கோலி (இந்திய கேப்டன்)
ரன் குவிக்கும் எந்திரம் என்று அழைக்கப்படும் இந்திய கேப்டன் விராட் கோலி உலகின் ‘நம்பர் ஒன்’ பேட்ஸ்மேனாக திகழ்கிறார். ஒரு நாள் கிரிக்கெட்டில் 2015-ம் ஆண்டு உலக கோப்பை போட்டிக்கு பிறகு அதிக ரன்கள் குவித்தவர் (69 ஆட்டத்தில் 19 சதத்துடன் 4,306 ரன்) இவர் தான். கடந்த ஆண்டு இங்கிலாந்து மண்ணில் விமர்சனங்களை தவிடிபொடியாக்கும் வகையில் ரன்வேட்டை நடத்திய விராட் கோலி இந்த உலக கோப்பையிலும் அமர்க்களப்படுத்துவார் என்று ரசிகர்கள் ஆவல் கொண்டுள்ளனர். 2011, 2015-ம் ஆண்டு உலக கோப்பை போட்டிகளில் மொத்தம் 17 ஆட்டங்களில் விளையாடி 2 சதம் மட்டுமே அடித்துள்ள கோலி இந்த முறை அந்த எண்ணிக்கையை உயர்த்துவார் என்று நம்பலாம்.
Prev1 of 5
Use your ← → (arrow) keys to browse

Sathish Kumar:

This website uses cookies.