5) இனியும் தோனி அணிக்கு தேவையா?
அதாங்க! நம்ம ‘தல’ தோனி மீதான சில முன்னாள் இந்திய கிரிக்கெட் வீரர்களின் விமர்சனம் தான் 2017ம் ஆண்டு முழுவதும் பரவலாக விவாதிக்கப்பட்டு வந்தது. (வருஷா வருஷம் அதைத் தான் விவாதிக்குறாங்க-னு சொல்றீங்களா!). என்னதான், தல மின்னல் வேகத்தில் ரன்னிங் ஓடினாலும், ஸ்டெம்பிங் செய்தாலும், சில சமயங்களில் பேட்டிங்கில் அதிரடி சரவெடி காட்டாமல் போனதால், முன்னாள் வீரர்கள் சிலர் தோனியை விமர்சித்தனர்.
குறிப்பாக அகர்கர் கூறுகையில், “இந்திய அணி வேறொரு நல்ல வீரரை தேர்வு செய்யும் நேரம் வந்துவிட்டது. தோனி கேப்டனாக இருந்தால் அவரது பேட்டிங்கில் கேள்வி கேட்க முடியாது. ஆனால், இந்தியா இப்போது அவர் கேப்டன்சியை நம்பி இல்லை. பேட்டிங்கை நம்பி இருக்கிறது. அதை அவர் பூர்த்தி செய்வதில்லை” என்று காட்டமாக விமர்சித்தார்.
அகர்கர் மட்டுமல்ல லக்ஷ்மண், ஆகாஷ் சோப்ரா போன்ற வீரர்களும் தோனியை விமர்சித்தனர். ஆனால், காஷ்மீர் முதல் கன்னியாகுமரி வரை தோனிக்கு இருக்கும் ரசிகர் பட்டாளம், ஒருமுறை கூட தோனியை விட்டுக் கொடுத்ததேயில்லை. யார் தோனியை விமர்சித்தாலும், விமர்சித்தவர்களை வச்சு செய்தனர். அதேபோன்று, கேப்டன் விராட் கோலி மற்றும் கோச் ரவி சாஸ்திரியின் ஆதரவு தோனிக்கு பக்க பலமாக இருப்பதால், புது வருடத்தில் தல மாஸ் காட்ட வேண்டும் என்பதே நமது விருப்பம்.