டாஸ் வென்ற ராஜஸ்தான் பேட்டிங் தேர்வு செய்துள்ளது!! அணி விவரம்! உள்ளே!

ராஜஸ்தான் ராயல்ஸ் (முதல்): ராகுல் திரிபாதி, சஞ்சய் சாம்சன், பென் ஸ்டோக்ஸ், ஜோஸ் பட்லர் (வி), மஹிபல் லோம்ரோர், கிருஷ்ணப்பா கவுதம், ஜோஃப்ரா ஆர்ச்சர், தவாள் குல்கர்னி, இஷோதி, ஜெய்தேவ் யூனட், ட ஆர்சி ஷோரியஸ் கோபால், பென் லாப்லின்

டெல்லி டேர்டெவில்ஸ், ப்ரத்வி ஷா, கொலின் முர்ரோ, ஷ்ரியாஸ் ஐயர் (சி), ரிஷாப் பன்ட் (வி), க்ளென் மேக்ஸ்வெல், விஜய் ஷங்கர்,சபாஷ் நடீம், லியாம் பிளங்குட், அமித் மிஸ்ரா, அவேஷ் கான், ட்ரென்ட் போல்ட், 

புள்ளிகள் பட்டியலில் கடைசி இடத்தில் உள்ள தில்லி டேர் டெவில்ஸ் அணியுடன், 5-ஆம் இடத்தில் உள்ள ராஜஸ்தான் ராயல்ஸ் அணி புதன்கிழமை இரவு தில்லியில் நடைபெறும் ஆட்டத்தில் மோதுகின்றன.
தொடர் தோல்வி காரணமாக கேப்டன் பதவியில் இருந்து கம்பீர் விலகிய நிலையில் தில்லிக்கு ஷ்ரேயஸ் ஐயர் புதிய கேப்டனாக நியமிக்கப்பட்டார். அதன் பின்னர் நடைபெற்ற ஆட்டத்தில் தில்லி அதிரடியாக எழுச்சி பெற்றது. ஆனால் திங்கள்கிழமை சென்னைக்கு எதிரான ஆட்டத்தில் ரிஷப் பந்த், விஜய் சங்கர் ஆகியோர் சிறப்பாக ஆடியும், 13 ரன்களில் தில்லி தோல்வியைத் தழுவியது. 8 ஆட்டங்களில் 2 வெற்றி, 6 தோல்வியுடன் உள்ள தில்லி மீதமுள்ள ஆட்டங்களில் வென்றால் மட்டுமே பிளே ஆஃப் சுற்றுக்கு செல்ல முடியும் நிலை உள்ளது.
7 ஆட்டங்களில் 3 வெற்றி, 4 தோல்வியுடன் உள்ள ராஜஸ்தான் தொடர்ந்து 5-ஆம் இடத்திலேயே உள்ளது. தில்லியுடன் வெற்றி பெற்றால் ராஜஸ்தான் அணி தனது பிளே ஆஃப் சுற்று வாய்ப்பை தக்க வைக்கும்.
தில்லி அணி ஷ்ரேயஸ், பந்த் போன்றவர்களை மட்டுமே பேட்டிங்கில் நம்பி உள்ளது. ஏனைய வீரர்கள் எவரும் சோபிக்கவில்லை. பந்துவீச்சில் பெளல்ட் மட்டுமே ஜொலித்து வருகிறார். மற்ற வீரர்கள் தங்கள் பங்கை சரிவர செய்யவில்லை.
அதே நேரத்தில் ராஜஸ்தான் அணி ரஹானே, சாம்சன் ஆகியோரது ஆட்டத்தை நம்பியே உள்ளது. பென் ஸ்டோக்ஸ், ஜோஸ் பட்லர் ஆகியோர் ஆட்டம் குறிப்பிடும்படியாக இல்லை. பந்து வீச்சில் ஜோப்ரா ஆர்சர் சிறப்பாக வீசி வருகிறார். சுழற்பந்து வீச்சாளர்கள் ஷ்ரேயஸ் கோபால், கெளதம் ஆகியோர் பந்துவீச்சு எடுபடாத நிலையே உள்ளது.

Editor:

This website uses cookies.