இந்தியன் டீம்ல இந்த ரெண்டு பேரோட நிலைமை அவ்ளோதான்; விராட் கோலி காட்டம்!!

ரகானே மற்றும் புஜாரா எதிர்காலம் பற்றி ஆலோசனை நடத்தப்படும் என்று கேப்டன் விராட் கோலி தனது பேட்டியில் காட்டமாக தெரிவித்துள்ளார்.

தென்னாபிரிக்காவுடனான டெஸ்ட் தொடரில் இந்திய அணி எளிதாக வென்றுவிடும் என பலரும் கருத்து தெரிவித்து வந்த நிலையில், அதிர்ச்சியளிக்கும் விதமாக 2 – 1 என்ற கணக்கில் இந்திய அணி இந்த தொடரை இழந்து இருக்கிறது.

இரண்டாவது டெஸ்டில் செய்த அதே தவறை மூன்றாவது டெஸ்டிலும் இந்திய அணி செய்திருப்பதாக பலரும் கருதுகின்றனர். பந்துவீச்சாளர்கள் எந்தவித தவறும் செய்யவில்லை. இந்திய அணி இப்போட்டியை இழந்ததற்கு முழுமுதற் காரணம் பேட்ஸ்மேன்கள் மட்டுமே என்று கேப்டன் விராட் கோலி தனது பேட்டியில் குறிப்பிட்டிருந்தார்.

மூன்று டெஸ்ட் போட்டியிலும் கடும் விமர்சனத்திற்கு உள்ளான இருவர் ரஹானே மற்றும் புஜாரா. இந்த இருவரும் 2வது டெஸ்ட் போட்டியின் 2-வது இன்னிங்சில் அரைசதம் அடித்ததால், மூன்றாவது டெஸ்ட் போட்டியின்போது மீண்டும் பார்முக்கு வந்து விட்டனர் என்ற அடிப்படையில், வாய்ப்பு கொடுக்கப்பட்டது. ஆனால் அதனை பயன்படுத்திக் கொள்ளாமல் இருவரும் மீண்டும் ஒரு முறை சொதப்பலான ஆட்டத்தை வெளிப்படுத்தி உள்ளனர்.

இதில் குறிப்பாக, ரஹானே முதல் இன்னிங்சில் 9 ரன்கள் இரண்டாவது இன்னிங்சில் ஒரு ரன் என மிகவும் மோசமான ஆட்டத்தை வெளிப்படுத்தினார். புஜாரா, முதல் இன்னிங்சில் 43 ரன்கள் இரண்டாவது இன்னிங்சில் வெறும் 9 ரன்களுக்கு ஆட்டமிழந்தது இந்திய அணிக்கு பின்னடைவாக அமைந்தது.

பேட்டிங்கில் இந்திய அணி மோசமாக செயல்பட்டதால் பெரிய அளவிற்கு ரன் குவிக்க முடியவில்லை. எதிர்பார்த்த அளவு இலக்கை நிர்ணயிக்க முடியவில்லை. இதனால் தென் ஆப்பிரிக்க அணி எளிதாக இந்திய அணியை வீழ்த்தி விட்டது. தொடரை இழந்த பிறகு பேட்டியளித்த விராட் கோலி கூறுகையில்,

“இந்திய அணியின் மிடில் ஆர்டர் குறித்து ஆலோசனை நடத்த வேண்டும். ரஹானே மற்றும் புஜாரா இருவரின் எதிர்காலம் பற்றி நான் எதுவும் கருத்து தெரிவிக்க முடியாது. ஆனால் இவர்கள் இருவரையும பற்றி தேர்வுக்குழு அதிகாரிகளுடன் கலந்து ஆலோசித்து விரைவில் முடிவு எடுக்கப்படும். அதுவரை இது குறித்து கருத்துக்களை கேட்பதை தவிர்க்க வேண்டும். ரசிகர்கள் போல அணி நிர்வாகத்திற்கும் நன்றாக செயல்படாத வீரர்கள் மீது விமர்சனம் இருக்கிறது.

ஆனாலும் ரஹானே மற்றும் புஜாரா இருவரும் கடந்த காலங்களில் மிகச்சிறப்பாக இந்திய அணிக்கு விளையாடி கொடுத்திருக்கின்றனர். அதனடிப்படையிலேயே தொடர்ந்து வாய்ப்புகளும் கொடுக்கப்பட்டது என்பதை அனைவரும் உணர வேண்டும். விரைவில் இவர்கள் குறித்து முடிவுகள் அறிவிக்கப்படும்.” என்றார்.

Prabhu Soundar:

This website uses cookies.