வெளியானது ஐசிசி டெஸ்ட் தரவரிசை பட்டியல்.. கம்பேக் கொடுத்த கோஹ்லி, பும்ராஹ்!! முழு பட்டியல் உள்ளே..

ஆஷஸ் தொடர் மற்றும் தென்னாப்பிரிக்கா அணியுடனான டெஸ்ட் தொடர் முடிவுற்ற பிறகு ஐசிசி தரவரிசை பட்டியலை வெளியிட்டுள்ளது.

இங்கிலாந்து மற்றும் ஆஸ்திரேலிய அணிகள் மோதிய டெஸ்ட் தொடர் மற்றும் தென் ஆப்பிரிக்க அணியுடன் நடைபெற்ற 3வது டெஸ்ட் போட்டி ஆகிய இரண்டும் முடிவுற்ற பிறகு புதிய தரவரிசை பட்டியலை ஐசிசி வெளியிட்டுள்ளது.

5வது டெஸ்ட் போட்டியில் அபாரமாக விளையாடி சதம் விளாசிய டிராவிஸ் ஹெட் தொடர் நாயகனாக தேர்வு செய்யப்பட்டார். இதனால் கிட்டத்தட்ட 8 இடங்கள் முன்னேறி பேட்டிங் தரவரிசையில் ஐந்தாவது இடத்தை பிடித்துள்ளார். இதே இடத்தில் இந்திய அணியின் கேப்டன் ரோகித் சர்மா இருப்பது குறிப்பிடதக்கது.

மூன்றாவது டெஸ்ட் போட்டியில் விளையாடி முதல் இன்னிங்சில் அரைசதம் அடித்த விராட் கோலி 9-வது இடத்தில் இருந்து மீண்டும் ஏழாவது இடத்திற்கு முன்னேறியுள்ளார். பந்துவீச்சு தரவரிசைப் பட்டியலில் பொருத்தவரை, 3 டெஸ்ட் போட்டிகளில் 20 விக்கெட்டுகளை கைப்பற்றிய ரபாடா மூன்றாவது இடத்திற்கு முன்னேறியுள்ளார். முதலிடத்தில் ஆஸ்திரேலிய அணியின் கேப்டன் பெட் கம்மின்ஸ் தொடர்ந்து நீடித்து வருகிறார்.

மூன்றாவது டெஸ்ட் போட்டியில் 5 விக்கெட்டுகளை கைப்பற்றிய ஜஸ்பிரித் பும்ரா பந்துவீச்சு தரவரிசை பட்டியலில் மீண்டும் முதல் பத்து இடங்களுக்குள் வந்திருக்கிறார்.

வங்கதேச அணியுடன் நடைபெற்ற 2வது டெஸ்ட் போட்டியின் போது, இரட்டை சதங்கள் அடித்து அணியின் வெற்றிக்கு முக்கிய பங்காற்றிய கேப்டன் டாம் லேதம் மீண்டும் பேட்டிங் தரவரிசையில் 10 இடங்களுக்குள் வந்திருக்கிறார்.  இவர் 10-வது இடத்தை பிடித்திருப்பது குறிப்பிடத்தக்கது.

ஆல்ரவுண்டர் தரவரிசையில் ரவிச்சந்திரன் அஸ்வின் மற்றும் ரவீந்திர ஜடேஜா ஆகிய இருவரும் தொடர்ந்து 2-வது மற்றும் 3-வது இடத்தில் நீடிக்கின்றனர். வெஸ்ட் இண்டீஸ் அணியின் மூத்த வீரர் ஜேசன் ஹோல்டர் இந்தத் தரவரிசையில் தொடர்ந்து முதலிடத்தில் இருப்பது குறிப்பிடத்தக்கது.

டெஸ்ட் தரவரிசை உடன் ஒருநாள் போட்டிகளுக்கான தரவரிசைப் பட்டியல் வெளியிடப்பட்டு இருக்கிறது. அதில் அசோசியேட் அணியான அயர்லாந்து அணியை சேர்ந்த ஆல்ரவுண்டர் மெக்பிரின் தரவரிசை பட்டியலில் இடம் பிடித்திருப்பது ஆரோக்கியமானதாக பார்க்கப்படுகிறது.

Prabhu Soundar:

This website uses cookies.