நியூசிலாந்திடம் தூசியான இங்கிலாந்து…. 58 ரன்களுக்கு ஆல் அவுட் !!

நியூசிலாந்திடம் தூசியான இங்கிலாந்து…. 58 ரன்களுக்கு ஆல் அவுட்

நியூசிலாந்து அணிக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டியின் முதல் இன்னிங்ஸில் இங்கிலாந்து அணி வெறும் 58 ரன்களுக்கே அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து கிரிக்கெட் ரசிகர்களுக்கு பெரும் அதிர்ச்சியை கொடுத்துள்ளது.

நியூசிலாந்து- இங்கிலாந்து அணிகள் இடையேயான 2 டெஸ்ட் போட்டித் தொடரில் முதல் டெஸ்ட் பகல்-இரவாக ஆக்லாந்தில் இன்று தொடங்கியது.

நியூசிலாந்து கேப்டன் வில்லியம்சன் ‘டாஸ்’ வென்று இங்கிலாந்து முதலில் விளையாட அழைத்தார். இங்கிலாந்தை அணியில் ‘ஆல்ரவுண்டர்’ பென்ஸ்டோக்ஸ் இடம் பெற்றார். 7 மாதங்களுக்கு பிறகு அவருக்கு மீண்டும் வாய்ப்பு வழங்கப்பட்டது.

டிரென்ட் போல்ட், சவுத்தி ஆகியோரின் அனல்பறக்கும் பந்துவீச்சில் இங்கிலாந்து அணி நிலை குலைந்தது. 27 ரன்னில் அந்த அணி 9 விக்கெட்டை இழந்தது.

9-வது வீரரான ஓவர்டன் ஒருவரே தாக்கு பிடித்து ஆடியதால் இங்கிலாந்து மிகவும் மோசமான நிலையில் இருந்து தப்பியது.

அந்த அணி 20.4 ஓவர்களில் 58 ரன்னில் சுருண்டது. இரண்டு வீரர்களே இரட்டை இலக்கத்தை எடுத்தனர். கிரேக் ஓவர்டன் 25 பந்தில் 33 ரன் (5 பவுண்டரி, 1 சிக்சர்) எடுத்து ஆட்டம் இழக்காமல் இருந்தனர். ஸ்டோன்மேன் 11 ரன் எடுத்தார்.

5 வீரர்கள் ‘டக்’ அவுட் ஆனார்கள். கேப்டன் ஜோரூட், பென்ஸ்டோக்ஸ், பேர்ஸ்டோவ், மொய்ன்அலி, ஸ்டூவர்ட் பிராட் ஆகியோர் ரன் எதுவும் எடுக்காமல் ஆட்டம் இழந்தனர்.

நியூசிலாந்து தரப்பில் போல்ட் 32 ரன் கொடுத்து 6 விக்கெட் வீழ்த்தினார். டெஸ்ட் போட்டியில் அவரது சிறந்த பந்துவீச்சு இதுவாகும். இதற்கு முன்பு வெஸ்ட்இண்டீசுக்கு எதிராக அவர் 40 ரன் கொடுத்து 6 விக்கெட் வீழ்த்தியதே சிறந்த பந்துவீச்சாக இருந்தது. சவுத்தி 4 விக்கெட் கைப்பற்றினார்.

இங்கிலாந்து அணியின் 6-வது குறைந்த பட்ச ஸ்கோராகும். இங்கிலாந்து அணி 45 ரன்னில் 1887-ம் ஆண்டு சுருண்டதே குறைந்தபட்ச ஸ்கோராகும். 131 ஆண்டு காலமோசமான நிலைக்கு செல்வதை அந்த அணி கடுமையாக போராடி தவிர்த்தது. நியூசிலாந்து அணி 26 ரன்னில் சுருண்டு இருந்ததே (1955) டெஸ்டில் குறைந்த பட்ச ஸ்கோராகும்.

Mohamed:

This website uses cookies.