இந்த ஐபிஎல் தொடரில் நான் ஆடுவது சந்தேகம் தான்! அறிவித்த நட்சத்திர வீரர் கடுப்பான ரசிகர்கள்!
இந்தியாவில் ஐபிஎல் தொடரில் வருடாவருடம் நடப்பது வழக்கம். இந்த வருடம் மார்ச் 29ஆம் தேதி முதல் மே 15ஆம் தேதி வரை ஐபிஎல் தொடர் நடைபெற்று முடிந்திருக்க வேண்டியது. ஆனால் கொரோனா வைரஸ் தாக்கத்தின் காரணமாக ஐபிஎல் தொடர் அடுத்தடுத்து தள்ளிவைக்கப்பட்டு ஒரு முடிவில்லாமல் சென்று கொண்டிருந்தது.
தற்போது 4 மாத இழுபறிக்குப் பின்னர் செப்டம்பர் மற்றும் அக்டோபர் மாதங்களில் ஐபிஎல் தொடரை ஐக்கிய அரபு அமீரகத்தில் நடத்த பிசிசிஐ கிட்டத்தட்ட முடிவு செய்துவிட்டது. இதில் மிகப் பெரிய சிக்கல் என்னவென்றால் வெளிநாட்டு வீரர்கள் அனைவரையும் ஐபிஎல் தொடர் நடைபெறும் அந்த குறிப்பிட்ட நாட்டிற்கு அழைத்து வந்து மருத்துவ பாதுகாப்பாக வைத்திருக்க வேண்டும்.
இது இந்திய கிரிக்கெட் வாரியத்திற்கு மிகப்பெரிய சவாலாக இருக்கும். இந்நிலையில் மும்பை இந்தியன்ஸ் அணியில் தேர்ந்தெடுக்கப்பட்ட வேகப்பந்துவீச்சாளர் டிரென்ட் போல்ட் இந்த வருட ஐபிஎல் தொடரில் தான் கலந்து கொள்வது சந்தேகம்தான் என்று தெரிவித்துள்ளார் .இவர் கூறுகையில்…
இந்த வருட ஐபிஎல் தொடர் ஒரு சில குறிப்பிட்ட மாதங்களில் நடைபெறும் என்று எனது காதுக்கு செய்தி வந்து சேர்ந்தது. நியூசிலாந்தில் கூட நடக்கலாம் என்று வாய்ப்புகள் இருந்தது. ஒவ்வொரு வாரமும் ஒவ்வொரு மாதிரியாக செய்திகளை கூறிவருகிறார்கள்.
நான் இந்த ஐபிஎல் தொடரில் கலந்து கொள்வது குறித்து ஆலோசித்து வருகிறேன். என் மீது அக்கறை இருக்கும் மனிதர்களிடம் ஆலோசனை கேட்டு வருகிறேன். மேலும், எனது குடும்பத்திற்கு எது பாதுகாப்பாக இருக்குமோ அதனை செய்ய முடிவெடுத்துள்ளேன் கிட்டத்தட்ட நான் இந்த ஐபிஎல் தொடரில் கலந்து கொள்வது சந்தேகம்தான் என்று குறிப்பிட்டுள்ளார் டிரென்ட் போல்ட் .
இதுவரை டிரென்ட் போல்ட் டெல்லி கேப்பிடல் மற்றும் மும்பை இந்தியன்ஸ் அணிக்காக ஐபிஎல் தொடரில் விளையாடி இருக்கிறார். மொத்தம் 33 போட்டிகளில் விளையாடியுள்ள அவர் 38 விக்கெட்டுகளை வீழ்த்தியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.