சன் ரைசர்ஸ் ஹைதராபாத் அணியின் புதிய தலைமை பயிற்சியாளர் நியமனம்!!

சன்ரைசர்ஸ் ஐதராபாத் அணியின் புதிய தலைமை பயிற்சியாளராக டிரவர் பைலில் நியமிக்கப்பட்டுள்ளார்.

உலக கோப்பையை வென்ற இங்கிலாந்து அணியின் தலைமை பயிற்சியாளராக இருந்து வந்த டிரவர் பைலில், தற்போது சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணிக்கு புதிய தலைமை பயிற்சியாளராக நியமிக்கப்பட்டுள்ளார். கடந்த 2013ஆம் ஆண்டிலிருந்து சன் ரைசேர்ஸ் அணிக்கு தலைமை பயிற்சியாளராக இருந்து வந்த டாம் மூடி தற்போது நீக்கப்பட்டுள்ளார். டாம் மூடி தலைமையில் தான் 2016ஆம் ஆண்டு சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணி ஐபிஎல் கோப்பையை வென்றது.

டிரவர் இதற்கு முன்பாக ஐபிஎல் தொடரில் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியின் தலைமை பயிற்சியாளராக இருந்து வந்துள்ளார். இவர் தலைமையில் தான் கொல்கத்தா அணி இருமுறை ஐபிஎல் கோப்பையை வென்றது. மேலும் பிக் பாஸ் லீக் தொடரில் சிட்னி சிக்ஸர்ஸ் அணிக்கு தலைமை பயிற்சியாளராக இருந்துள்ளார். அப்போது இவர் தலைமையில் சிட்னி சிக்ஸர்ஸ் அணி பிக் பாஸ் லீக் கோப்பையையும், சாம்பியன்ஸ் லீக் கோப்பையையும் வென்றிருக்கிறது.

2011 ஆம் ஆண்டு உலக கோப்பை இறுதி வரை சென்ற இலங்கை அணியின் தலைமை பயிற்சியாளராக டிரவர் இருந்திருக்கிறார். அதன் பிறகு இங்கிலாந்து அணிக்கு தலைமைப் பொறுப்பு ஏற்றதில் இருந்து தற்போது உலக கோப்பையை வென்ற வரை மிகப்பெரிய பங்கு வகித்திருக்கிறார். ஆஷஸ் தொடருக்கு பிறகு இங்கிலாந்து பயிற்சியாளர் பொறுப்பில் இருந்து டிரவர் விலக உள்ளதாக முன்னமே அறிவித்திருந்தார்.

புதிய தலைமை பயிற்சியாளரை நியமித்த பிறகு பத்திரிகையாளர்களிடம் பேசிய சன்ரைசர்ஸ் ஐதராபாத் அணியின் நிர்வாகம், “டாம் மூடி சன் ரைசேர்ஸ் அணிக்கு மிகப்பெரிய பங்காற்றியிருக்கிறார். 7 ஐபிஎல் தொடர்களில் ஐந்து முறை பிளே ஆப்சுற்றுக்கு எடுத்துச் சென்றிருக்கிறார். அவருக்கு இத்தருணத்தில் மிகப்பெரிய நன்றிகளை கூறிக் கொள்ள கடமைப்பட்டிருக்கிறோம். அவரை தொடர்ந்து உலக கோப்பையை வென்று தந்த இங்கிலாந்து அணியின் பயிற்சியாளர் டிரவர் இனி சன் ரைசேர்ஸ் அணியை வழிநடத்துவார்” என்றது.

Prabhu Soundar:

This website uses cookies.