டி.20 போட்டிகளே இருக்க கூடாது; இங்கிலாந்து பயிற்சியாளர் சொல்கிறார்
டி.20 போட்டிகளால் கிரிக்கெட் வீரர்களுக்கு அதிக நெருக்கடி ஏற்படுவதாக இங்கிலாந்து அணியின் பயிற்சியாளர் டிரேவர் பெய்லிஸ் தெரிவித்துள்ளார்.
டி.20 கிரிக்கெட் அறிமுகமான பின்பு ஒவ்வொரு வீரரின் அதிரடி ஆட்டத்தாலும் டி.20 போட்டி கிரிக்கெட் ரசிகர்களிடம் மிகப்பெரும் வரவேற்ப்பை பெற்றிருந்தாலும், டி.20 போட்டிகளில் மட்டுமே ரசிகர்கள் சமீப காலமாக ஆர்வம் செலுத்த துவங்கிவிட்டனர்.
இதனால் டெஸ்ட் போட்டிகளின் எதிர்காலம் குறித்து கேள்வி எழுந்து வருகிறது. மேலும் டெஸ்ட் போட்டிகளில் இனி தேவையா என்ற விவாதமும் சமீப காலமாக வலுத்து வருகிறார். இன்னும் சிலர் ஒருநாள் போட்டிகள் கூட தேவையில்லை டி.20 போட்டிகளே போதும் என்றும் கூறி வருகின்றனர்.
இந்நிலையில் இது குறித்து கருத்து தெரிவித்துள்ள இங்கிலாந்து அணியின் பயிற்சியாளர் டிரேவர் பெய்லிஸ், டி.20 போட்டிகளே தேவை இல்லை என்று தெரிவித்துள்ளார்.
இது குறித்து பேசிய அவர், டி.20 போட்டிகளால் கிரிக்கெட் வீரர்களுக்கு கடும் நெருக்கடி ஏற்படுகிறது. போதிய கால அவகாசம் இல்லாமல் தொடர்ந்து விளையாடி கொண்டே இருப்பது கிரிக்கெட் வீரர்களுக்கு கூடுதல் அழுத்ததை கொடுக்கும். நான் இதுவரை டி.20 போட்டிகளில் விளையாடியது இல்லை. ஆனால் சில அணிகளுக்கு பயிற்சியாளராக இருந்துள்ளேன். இதனால் வீரர்களுக்கு ஏற்படும் அழுத்தம் குறித்து எனக்கு தெரியும்.
நீச்சல் விளையாட்டை எடுத்து கொண்டால் 1500 மீ., ஸ்பெசலிஸ்ட் என்று ஒருவர் இருப்பார், 100 மீ எனக்கு என ஒரு ஸ்பெசலிஸ்ட் இருப்பார் ஆனால் கிரிக்கெட்டில் அவ்வாறு இல்லை, ஐ.சி.சி., நடத்தும் தொடர்களை தவிர்த்து டி.20 போட்டிகளில் தவிர்க்கப்பட்டால் அது கிரிக்கெட்டிற்கு நல்லது என்று தெரிவித்துள்ளார்.