டக்வொர்த் விதிமுறையையும் அதன் மூலம் வைக்கப்படும் காரணமில்லா டார்கெட்டையும் ட்விட்டரில் ரசிகர்கள் கடுமையாக விமர்சித்துள்ளனர்.
இந்தியா நியூசிலாந்து அணிகள் மோதி வரும் உலககோப்பை தொடரின் முதல் அரையிறுதி போட்டி, மான்செஸ்டர் மைதானத்தில் நடைபெற்று வருகிறது. முதலில் டாஸ் வென்ற நியூசிலாந்து அணி இந்தியாவிற்கு எதிராக பேட்டிங் செய்ய முடிவு செய்து களமிறங்கியது.
துவக்க வீரர்களாக களமிறங்கிய கப்டில் மற்றும் நிக்கோல்ஸ் இருவரும் துவக்கம் முதாலே திணறினர். 14 பந்துகளில் 1 ரன் மட்டுமே எடுத்து கப்டில் ஆட்டமிழந்தார். அடுத்ததாக கேன் வில்லியம்சன் களமிறங்கிய பிறகு, நிதானமாக ஆடி விக்கெட் ரன் சேர்த்தனர். 51 பந்துகள் ஆடிய நிக்கொலஸ் 28 ரன்களுக்கு வெளியேறினார். கேன் வில்லியம்ஸ் 67 ரன்கள், நீசம் 12, காலின் 16 ரன்கள் என ஆட்டமிழக்க 46.1 ஓவர்களில் 211/5 என இருக்கையில் மழை குறுக்கீட்டது. அதன் பிறகு தற்போது வரை மழை நிற்கவில்லை.
மழை நின்றால் டக்வொர்த் லூயிஸ் முறைப்படி, இந்திய அணி
- 46 ஓவர்களுக்கு 237 ரன்கள் டார்கெட்
- 40 ஓவர்களுக்கு 223 ரன்கள் டார்கெட்
- 35 ஓவர்களுக்கு 209 ரன்கள் டார்கெட்
- 30 ஓவர்களுக்கு 192 ரன்கள் டார்கெட்
- 25 ஓவர்களுக்கு 172 ரன்கள் டார்கெட்
- 20 ஓவர்களுக்கு 148 ரன்கள் டார்கெட்.
இவ்வாறு ஓவர்கள் குறைய, நிணயிக்கப்பட்ட அந்தந்த ரன்களை எடுக்க வேண்டும். இரு அணிகளும் குறைந்தபட்சம் 20 ஓவர்கள் ஆட வேண்டும். இல்லையெனில், ரிசர்வ் டே அடிப்படையில் ஆட்டம் நாளை இன்று முடிந்ததன் தொடர்ச்சியாக எவ்வித மாற்றம் இன்றி தொடரும்.
இந்திய பந்துவீச்சில் 120 ரன்களை எட்டவே நியூசிலாந்து அணிக்கு 30க்கும் மேற்பட்ட ஓவர்களை எடுத்துக்கொண்டது. ஆனால், டக்வொர்த் முறைப்படி, இந்திய அணிக்கு 20 ஓவர்களிலேயே 148 ரன்களை இலக்காக வைத்தது ஏன் என ட்விட்டரில் ரசிகர்கள் விதிமுறையை கடுமையாக விமர்சித்து வருகின்றனர். அவற்றில் சிலவற்றை நாம் இங்கு காண்போம்.