கத்துக்குட்டி போல் இல்லாமல், அற்புதமாக ஆடிய ஆப்கன் அணி : பாரட்டும் ட்விட்டர் உலகம்! இந்திய அணிக்கு 254 ரன் இலக்கு!

ஆசியக் கோப்பையின் இன்றைய போட்டியில் இந்தியாவை எதிர்த்து ஆப்கானிஸ்தான் விளையாடி வருகிறது.

ஆசியக் கோப்பை 2018 தொடர் துபாயில் நடைபெற்று வருகிறது. தற்போது நடைபெற்று வரும் சூப்பர் 4 சுற்றின் இன்றைய ஆட்டத்தில் இந்தியா-ஆப்கானிஸ்தான் அணிகள் மோதுகின்றன. ஏற்கனவே இந்திய அணி இறுதிப்போட்டிக்கு தேர்வு பெற்றதால், ரோகித் ஷர்மா, புவனேஷ் குமார், பும்ரா, ஷிகர் தவான் மற்றும் சாஹல் ஆகியோருக்கு இன்றைய போட்டியில் ஓய்வளிக்கப்பட்டுள்ளது. ரோகித் ஓய்வால் இன்று தோனி கேப்டனாக அணியை வழி நடத்துகிறார்.

இந்தப் போட்டியில் டாஸ் வென்ற ஆப்கானிஸ்தான் அணி முதலில் பேட்டிங் செய்ய தீர்மானித்தது. அந்த அணியின் தொடக்க வீரர்களாக களமிறங்கிய முகமத் மற்றும் ஜேவெத் ஆகியோர் விக்கெட்டை பறிகொடுக்காமல் விளையாடினர். ஜேவெத் மிகவும் பொறுமையான ஆட்டத்தை வெளிப்படுத்தினார். ஆனால் முகமத் ஆரம்பம் முதலே அதிரடி காட்டினார். அணியின் ரன்கள் 65 இருக்கும்போது ஜேவெத் 5 (30) ரன்கள் மட்டுமே எடுத்து ஆட்டமிழந்தார்.

ஆனால் அதற்குள் முகமத் அரைசதம் அடித்துவிட்டார். இதைதொடர்ந்து வந்த ரஹ்மத் 3 (4), ஹாஸ்மதுல்லா 0 (3), கேப்டன் ஆஸ்கார் 0 (1) குல்பாதின் 15 (46) என அடுத்தடுத்து விக்கெட்டை பறிகொடுத்தனர். ஆனால் மறுபுறம் அதிரடியை நிறுத்தமால் தொடர்ந்த முகமத் தனி ஒருவனாக 88 பந்துகளில் சதம் அடித்தார். தற்போது 50 ஓவர்கள் முடிவில் 8 விக்கெட் இழப்பிற்கு ஆப்கானிஸ்தான் 252 ரன்கள் எடுத்துள்ளது.

 

 

 

 

 

 

 

 

 

Rajeshwaran Naveen: Cricket Fan - Dhoni Lover - CSK Forever

This website uses cookies.