கிரிக்கெட் வரலாற்றில் 6000 ரன் அடித்த முதல் வீராங்கனை என சாதனை பெற்று, கிரிக்கெட்டில் அதிக ரன் அடித்த வீராங்கனை என பெருமையை பெற்றார் மித்தாலி ராஜ். நடப்பு சாம்பியன்சுக்கு எதிரான போட்டியின் போது கடினமான மைதானத்தில் சிறப்பாக விளையாடி 69 ரன் அடித்தார் மித்தாலி ராஜ். முதலில் பொறுமையாக விளையாடி, பந்துவீச்சுக்கு சாதகமான மைதானத்தில் சிறப்பாக விளையாடினார் மித்தாலி ராஜ்.
இந்திய மகளிர் அணியின் தொடக்க வீராங்கனை பூனம் ரவுட் சிறப்பாக விளையாடி சதம் அடித்தார். 136 பந்துகளை எதிர்கொண்ட அவர் 106 ரன் அடித்து, இந்திய அணி 50 ஓவர் முடிவில் 226 ரன் அடிக்க உதவி செய்தார்.
இந்திய அணி அரையிறுதிக்கு தகுதி பெற இந்த பந்துவீச்சாளர்களுக்கு சாதகமான மைதானத்தை பயன்படுத்தி இந்திய அணி வெற்றி பெற வேண்டும். அப்படி இந்திய அணி இந்த போட்டியில் தோல்வி பெற்றால், அடுத்த போட்டியில் இந்திய அணி வெற்றி பெற வேண்டும்.
இந்த போட்டியில் மித்தாலி ராஜ் மற்றும் பூனம் ரவுடி ஆகியோர் சிறப்பாக விளையாடியதால், ட்விட்டரில் அவர்களுக்கு பல வாழ்த்துக்கள் வந்தது.