பும்ராஹ்விற்கு ஓய்வு கொடுத்துவிடுங்கள்; ட்விட்டரில் ரசிகர்கள் வேண்டுகோள் !!

பும்ராஹ்விற்கு ஓய்வு கொடுத்துவிடுங்கள்; ட்விட்டரில் ரசிகர்கள் வேண்டுகோள்

உலகக்கோப்பை கிரிக்கெட் தொடரை கருத்தில் கொண்டு பும்ராஹ்விற்கு ஐ.பி.எல் தொடர் முழுவதிலும் இருந்து ஓய்வு வழங்க வேண்டும் என சமூக வலைதளங்களில் இந்திய கிரிக்கெட் ரசிகர்கள் போர்கொடி தூக்கியுள்ளனர்.

ஐ.பி.எல் 12வது சீசனின் இன்றைய ஆட்டத்தில் மும்பை இந்தியன்ஸ் அணியும், டெல்லி கேப்பிடல்ஸ் அணியும் பலப்பரீட்சை செய்து வருகின்றன.

மும்பை வான்கடே மைதானத்தில் நடைபெற்று வரும் இந்த போட்டியில் டாஸ் வென்ற மும்பை அணி முதலில் பந்துவீச்சை தேர்வு செய்தது.

இதனையடுத்து பேட்டிங் செய்த டெல்லி கேப்பிடல்ஸ் அணியின் பேட்ஸ்மேன்கள் மும்பை பந்துவீச்சாளர்களின் பந்துவீச்சை பிரித்து மேய்ந்தனர், இதில் குறிப்பாக டெல்லி அணியின் நம்பிக்கை நாயகனான ரிஷப் பண்ட் வெறும் 27 பந்துகளில் 7 சிக்ஸர் மற்றும் 7 பவுண்டரிகளுடன் 78 ரன்கள் குவித்து மாஸ் காட்டினார். இதன் மூலம் நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர் முடிவில் 6 விக்கெட்டுகளை இழந்த டெல்லி அணி 213 ரன்கள் எடுத்தது.

ரிஷப் பண்ட்டின் இன்றைய அதிரடி ஆட்டத்தை கண்டு இந்திய ரசிகர்கள் அனைவரும் மெய்சிலிர்த்து போயுள்ள அதே வேளையில், மறுபுறம் போட்டியின் போது காயமடைந்த பும்ராஹ் குறித்து ஒட்டுமொத்த கிரிக்கெட் ரசிகர்களும் அச்சம் கலந்த கவலை தெரிவித்து வருகின்றனர்.

இன்றைய போட்டியில் காயம் அடைந்த பும்ராஹ் குறித்து தங்களது சமூக வலைதள பக்கங்கள் மூலம் பேசும் கிரிக்கெட் ரசிகர்கள் அனைவரும், உலகக்கோப்பை கிரிக்கெட் தொடர் இன்னும் இரண்டு மாதத்தில் துவங்க உள்ள நிலையில் பும்ராஹ் இப்படி விசப்பரீட்சை செய்வது நல்லதல்ல என்று தெரிவித்து வருகின்றனர்.

 

மேலும் உலகக்கோப்பை கிரிக்கெட் தொடரில் பும்ராஹ்வின் தேவையை உணர்ந்த ரசிகர்கள், ஐ.பி.எல் தொடரை விட உலகக்கோப்பை தான் முக்கியம் என்பதால் பும்ராஹ்விற்கு ஒட்டுமொத்த ஐ.பி.எல் தொடரில் இருந்து ஓய்வு அளித்துவிடுங்கள், அவர் உலகக்கோப்பைக்கு நிச்சயம் தேவை என்று வலியுறுத்தி வருகின்றனர்.

அதில் சில இங்கே;

 

 

Mohamed:

This website uses cookies.