அடுத்தடுத்து 2 டெஸ்ட் போட்டிகளில் தென்ஆப்பிரிக்கா அணியை வீழ்த்தி இன்னிங்ஸ் வெற்றி பெற்று தொடரை கைப்பற்றிய இந்திய அணிக்கு சமூகவலைதளங்களில் பாராட்டுக்கள் குவிந்த வண்ணம் உள்ளன. அவற்றில் சிலவற்றை இங்கு காண்போம்.
தென் ஆப்பிரிக்கா மற்றும் இந்தியா இரு அணிகளும் மோதிய மூன்றாவது டெஸ்ட் போட்டி ராஞ்சியில் நடைபெற்றது. முதலில் டாஸ் வென்ற விராட் கோலி பேட்டிங்கை தேர்வு செய்தார். முதல் இன்னிங்சில் ரகானே 115 ரன்களும் ரோகித் சர்மா 212 ரன்கள் அடித்து அணியை வலுவான நிலைக்கு எடுத்துச் சென்றனர். 9 விக்கெட்டுக்கு 497 ரன்கள் எடுத்த இந்திய அணி முதல் இன்னிங்சில் டிக்ளேர் செய்தது.
இதனை அடுத்து பேட்டிங் செய்த தென்ஆப்பிரிக்கா அணி முதல் இன்னிங்சில் அடுத்தடுத்து விக்கெட்டுகளை இழந்து, இந்திய பந்து வீச்சாளர்களை சமாளிக்க முடியாமல் 162 ரன்களுக்குள் சுருண்டது. அதிகபட்சமாக ஹம்ஸா 62 ரன்களும், பவுமா 32 ரன்களும் எடுத்திருந்தனர். இந்திய அணி சார்பில் உமேஷ் யாதவ் 3 விக்கெட்டுகளை வீழ்த்தினார்.
முதல் இன்னிங்ஸில் 335 ரன்கள் முன்னிலை பெற்ற இந்திய அணி தென் ஆப்பிரிக்க அணியை ஃபாலோ ஆன் செய்ய பணித்தது. இரண்டாவது இன்னிங்சை தொடர்ந்த தென்ஆப்பிரிக்க அணி மீண்டும் விக்கெட்டுகளை பறிகொடுத்து இந்திய பந்துவீச்சாளர்கள் இடம் சரணடைந்தது.
தென்ஆப்பிரிக்கா அணி இரண்டாவது இன்னிங்சில் 133 ரன்களுக்கு அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து இன்னிங்ஸ் மற்றும் 202 ரன்கள் வித்தியாசத்தில் மூன்றாவது டெஸ்ட் போட்டியில் படுதோல்வி அடைந்தது.
இந்த வெற்றியின் மூலம் இந்திய அணி 3-0 என தொடரைக் கைப்பற்றி தென்னாப்பிரிக்க அணியை ஒயிட் வாஷ் செய்தது. மூன்றாவது டெஸ்டில் இரட்டை சதம் மற்றும் தொடரில் 529 ரன்கள் குவித்த ரோகித் சர்மா ஆட்ட நாயகன் மற்றும் தொடர் நாயகன் விருதை தட்டிச் சென்றார்.
தென்னாப்பிரிக்க அணியை வீழ்த்தி வரலாற்று சாதனை படைத்த இந்திய அணிக்கு டுவிட்டரில் வாழ்த்துக்கள் குவிந்த வண்ணம் இருக்கின்றன.
ட்விட்டர் ரியாக்ஷன்: