சென்னையில் நடைபெறும் ஐபிஎல் 23வது போட்டியில் டாஸ் வென்ற சிஎஸ்கே கேப்டன் தோனி கொல்கத்தாவை முதலில் பேட் செய்ய அழைத்து துல்லியமான கேப்டன்சி மற்றும் அபார்மான பந்து வீச்சு மாற்றம், களவியூகத்தினால் கொல்கத்தாவை 108/9 என்று குறுக்கினார்.
ஆந்த்ரே ரஸல் 10 பந்துகளில் 8 ரன்கள் என்று துல்லியப் பந்து வீச்சில் கட்டிப்போடப்பட்ட நிலையில் 13வது ஓவரில் இம்ரான் தாஹிர் வீசிய 2வது பந்தை ஸ்லாக் ஸ்வீப் செய்ய முயன்றார் ஆனால் செங்குத்தாக சரியான கொடி ஏற்றினார், பந்து இருள் வானில் சென்று திரும்பியது, ஹர்பஜன் சரியாகக் கணிக்கத் தவறிய உயரம் சென்றது.
மேலும் இருளிலிருந்து பந்து வரும் போது அதன் போக்கைக் கணிக்க ஹர்பஜனால் முடியவில்லை பந்து அவருக்குப் பின்னால் சென்று விழுந்தது. ரஸல் விக்கெட் நழுவ விடப்பட்டது.
அதன் பிறகும் கூட ரஸல் துல்லியப் பந்து வீச்சு, களவியூகத்தினால் கட்டிப்போடப்பட்டார் மேலும் எதிர்முனையில் ஒருவர் கூட நின்றாடவில்லை என்பதால் ரஸல் தலையில் சுமை ஏறியது. ஒருமுரை தாஹிர் பந்தில் எல்.பி.முறையீடு கேட்க களநடுவர் மறுக்க தோனி ரிவ்யூ செய்தார், ஆனால் பந்து ஆஃப் ஸ்டம்புக்கு வெளியே சென்றது தப்பினார் ரஸல்.
அதிரடி வீரர் சுனில் நரைனை ஹர்பஜன் வீழ்த்தினார். பார்மில் இருக்கும் ராணாவையும் சாஹர் வீழ்த்தினார், மிட்விக்கெட் கேட்ச், இதுவும் ஒரு அருமையான களவியூகம் ராணாவும் புரியாமல் புல் ஷாட்டில் விழுந்தார், சாஹர் கடைசியில் 4 ஓவர் 20 ரன்கள் 3 விக்கெட். ஷுப்மன் கில், 9 ரன்களில் இம்ரான் தாஹிர் பந்தில் தோனியிடம் ஸ்டம்ப்டு ஆகி வெளியேறினார். சாவ்லா, குல்தீப், பிரசீத் கிருஷ்ணா ஒற்றை இலக்கத்தில் சொதப்ப ரஸல் 50 நாட் அவுட், ஆனால் கட்டுப்படுத்தப்பட்டார், இவர் மட்டும் 8 ரன்களில் அவுட் ஆகியிருந்தால் கேகேஆர் ஸ்கோரைக் காணச் சகித்திருக்காது.
ஹர்பஜன் சிங் 15 ரன்களுக்கு 2 விக்கெட். இம்ரான் தாஹிர் 21 ரன்கள் 2 விக்கெட், குக்கெலீன் மட்டுமே 4 ஓவர்கள் 34 ரன்கள் விக்கெட் இல்லை. கேகேஆர் மொத்தத்தில் கடும் ஏமாற்றமளித்தது அல்லது தோனி வலையில் வீழ்ந்து 108 ரன்களையே எடுத்தது.
பின்னர் எளிதான இலக்குடன் களமிறங்கிய சென்னை அணி தொடக்க முதலே பொறுமையாக ஆடியது. குறைவான இலக்குதான் என்று அதிரடியாக ஆடாமல் வழக்கமாக ஒன்று மற்றும் இரண்டு ரன்களை சேர்ப்பதிலேயே குறிக்கோளாக ஆடியது. துவக்க வீரர் வாட்சன் 9 பந்துகளுக்கு 17 ரணில் தனது விக்கெட்டை இழந்தார் ஆனால் மற்றொரு தொடக்க வீரர் டு ப்லெசி பொறுமையாக அடி 45 பந்துகளில் 43 ரன்களில். சுரேஷ் ரெய்னா 14 ரன்களும் அம்பத்தி ராயுடு 21 ரன்கள் எடுக்க சென்னை அணி கடைசியில் 17.2 ஓவர்களில் 111 ரன் எடுத்து 7 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.