டி காக், ஹார்திக் அதிரடி: மும்பை 187 ரன் குவிப்பு!

டி காக், ஹார்திக் அதிரடி: மும்பை 187 ரன் குவிப்பு!

மும்பைக்கு எதிரான ஐபிஎல் போட்டியில் ராஜஸ்தான் அணி பந்துவீச்சை தேர்வு செய்துள்ளது.

ஐபிஎல் தொடரில் இன்று நடைபெறு லீக் போட்டியில் மும்பை இந்தியன்ஸ் மற்றும் ராஜஸ்தான் ராயல்ஸ் அணிகள் மோதுகின்றன. இந்தப் போட்டியில் டாஸ் வென்ற ராஜஸ்தான் அணி முதலில் பந்துவீச தேர்வு செய்துள்ளது.

மும்பை அணி வீரர்கள்:
ரோகித் சர்மா, குயிண்டன் டி காக், சூர்யகுமார் யாதவ், இஷான் கிஷன், கிரன் பொல்லார்ட், ஹர்திக் பாண்டியா, குருணாள் பாண்டியா, அல்ஜாரி ஜோசப், ராகுல் சஹார், ஜேசன் பெஹ்ரண்டப், ஜஸ்பிரித் பும்ரா
ராஜஸ்தான் ராயல்ஸ் அணி வீரர்கள்:
அஜிங்கியா ரகானே, ஜோஸ் பட்லர், சஞ்சு சாம்சன், ஸ்டீவன் ஸ்மித், ராகுல் திரிபாதி, லிவிங்ஸ்டோன், கிருஷ்ணப்பா கவுதம், ஜோப்ரா ஆர்ச்சர், ஹ்ச்ரேயஸ் கோபால், ஜெயதேவ் உனத்கட், தவால் குல்கர்னி.

மும்பை அணியை பொருத்தவரை கடந்த போட்டியில் விளையாடாத கேப்டன் ரோகித் ஷர்மா இந்தப் போட்டியில் களமிறங்குகிறார். மும்பை அணி கடந்த போட்டியில் தனது சிறப்பான ஆட்டத்தால் கடினமான இலக்கை சேஸ் செய்து வெற்றி பெற்றது. எப்போதுமே தொடக்கத்தில் சொதப்பும் மும்பை அணி இந்த ஐபிஎல் தொடரில் தொடர்ந்து மூன்று போட்டிகளில் வெற்றி பெற்று அசத்தி வருகிறது.

 

ராஜஸ்தான் அணி இந்த ஐபிஎல் தொடரில் சற்று சொதப்பி வருகிறது. இதுவரை 6 போட்டிகளில் விளையாடியுள்ள ராஜஸ்தான் அணி ஒரு போட்டியில் மட்டுமே வெற்றி பெற்றுள்ளது. அந்த அணியில் ரஹானே பட்லர் மட்டும் ஒரளவு சிறப்பாக விளையாடி வருகின்றனர். மற்ற வீரர்கள் சரியாக விளையாடவில்லை. அதனால் இந்த அணி சற்று தவித்து வருகின்றனர்.

Rajasthan Royal players celebrates the wicket of Rohit Sharma captain of Mumbai Indians during match 27 of the Vivo Indian Premier League Season 12, 2019 between the Mumbai Indians and the Rajasthan Royals held at the Wankhede Stadium in Mumbai on the 13th April 2019 Photo by: Vipin Pawar /SPORTZPICS for BCCI

இந்த இரு அணிகளும் இதுவரை 21 போட்டிகளில் விளையாடி உள்ளனர். அதில் மும்பை 11 போட்டிகளிலும், ராஜஸ்தான் அணி 9 போட்டிகளிலும் வெற்றி பெற்றுள்ளனர். இன்று மும்பை வான்கடே மைதானத்தில் நடைபெறும் போட்டி மும்பை அணிக்கு 200ஆவது டி20 போட்டி என்பதால் மும்பை அணி இதில் வெற்றி பெறும் என ரசிகர்கள் எதிர்பார்க்கின்றனர்.

Sathish Kumar:

This website uses cookies.