இங்கிலாந்துக்கு எதிரான நாட்டிங்காம் முதல் ஒருநாள் போட்டியில் இந்தியா டாஸ் வென்று பந்து வீச்சு தேர்வு செய்துள்ளது.
முதல் ஒருநாள் கிரிக்கெட்- இந்தியா டாஸ் வென்று பந்து வீச்சு தேர்வு
இங்கிலாந்து – இந்தியா இடையிலான டி20 கிரிக்கெட் தொடர் முடிவடைந்த நிலையில், நாட்டிங்காமில் இன்று ஒருநாள் கிரிக்கெட் தொடர் தொடங்குகிறது. 5 மணிக்கு தொடங்கும் இந்த போட்டிக்கான டாஸ் 4.30 சுண்டப்பட்டது. இந்திய அணி கேப்டன் விராட் கோலி டாஸ் வென்று பந்து வீச்சு தேர்வு செய்துள்ளார்.
இந்திய அணியில் இடம்பிடித்துள்ள வீரர்கள் விவரம்:-
1. விராட் கோலி, 2. ரோகித் சர்மா, 3. தவான், 4. சுரேஷ் ரெய்னா, 5. கேஎல் ராகுல், 6. டோனி, 7. ஹர்திக் பாண்டியா, 8. சித்தார்த் கவுல், 9. உமேஷ் யாதவ், 10. சாஹல், 11. குல்தீப் யாதவ்.
ஜேசன் ராய், பேர்ஸ்டோ, ஜோ ரூட், மோர்கன், ஸ்டோக்ஸ், ஜோஸ் பட்லர், மொயின் அலி, டேவிட் வில்லே, லியாம் பிளெங்கெட், ரஷீத், மார்க் உட்.
நாட்டிங்கமில் நடைபெறும் முதல் ஒருநாள் போட்டியில் ஜேசன் ராய், பேர்ஸ்டோ நல்ல தொடக்கத்துக்குப் பிறகு குல்தீப் யாதவ் 3 விக்கெட்டுகளைக் கைப்பற்ற இங்கிலாந்து 14 ஓவர்கள் முடிவில் 3 விக்கெட்டுகள் இழப்புக்கு 82 ரன்கள் எடுத்துள்ளது.
முதலில் ஜேசன் ராய், பேர்ஸ்டோ இணைந்து 10.2 ஓவர்களில் முதல் விக்கெட்டுக்காக 73 ரன்களை விளாச, 11வது ஓவரில் ஸ்ட்ரைக் பவுலர் குல்தீப் யாதவ் கொண்டு வரப்பட்டார். 35 பந்துகளில் 6 பவுண்டரிகளுடன் அபாயகரமாகத் திகழ்ந்த ஜேசன் ராய் முன் கூட்டியே திட்டமிட்ட ஒரு ரிவர்ஸ் ஸ்வீப் ஷாட்டை நேராகக் கவரில் அடித்தார். அதற்கு முன்னதாக ஸ்லிப் நகர்த்தப்பட்டு லெக் ஸ்லிப் வைக்கப்பட்டது, இதனால் ரிவர்ஸ் ஷாட் முயன்றார் ஜேசன் ராய் கேட்ச் ஆனது.
அடுத்ததாக ஜோ ரூட் 6 பந்துகளில் 3 ரன்களே எடுத்த நிலையில் குல்தீப்பின் உள்ளே வரும் பந்தை புரிந்து கொள்ளவில்லை, கால்காப்பைத் தாக்க பிளம்ப் எல்.பி. வெளியேறினார்.
ஜானி பேர்ஸ்டோ முதல் ஓவரில் ரிவியூ செய்யப்படாமல் தப்பித்தார், ஆனால் ஜோ ரூட் அவுட் ஆன அதே ஓவரின் 5வது பந்தில் ஜானி பேர்ஸ்டோ கூக்ளியை கணிக்கத் தவறி கால்காப்பில் வாங்கினார், நடுவர் நாட் அவுட் என்றனர் ஆனால் இம்முறை கோலி தவறு செய்யவில்லை, ரிவியூ கேட்டார் 35 பந்துகளில் 5 பவுண்டரிகள் 1 சிக்சருடன் பேர்ஸ்டோ நடையைக் கட்டினார்.
தற்போது இயன் மோர்கன், பென் ஸ்டோக்ஸ் ஆகிய புதிய பேட்ஸ்மென்கள் களம் கண்டுள்ளனர், குல்தீப் யாதவ் 3 ஓவர்கள் 8 ரன்கள் 3 விக்கெட்டுகள் இதுவரை.