தினேஷ் கார்த்திக் காட்டடி! கொல்கத்தா 175 ரன் குவிப்பு! ட்விட்டர் ரியாக்சன்!

ஈடன் கார்டன் மைதானத்தில் நடைபெறும் ஆட்டத்தில் கொல்கத்தாவுக்கு எதிராக ராஜஸ்தான் ராயல்ஸ் டாஸ் வென்று பந்து வீச்சை தேர்வு செய்துள்ளது.

ஐபிஎல் தொடரின் 43-வது லீக் ஆட்டம் கொல்கத்தா ஈடன் கார்டனில் இன்று இரவு 8 மணிக்கு நடக்கிறது. இதில் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் – ராஜஸ்தான் ராயல்ஸ் அணிகள் பலப்பரீட்சை நடத்துகின்றன. இதற்கான டாஸ் சுண்டப்பட்டதில் ராஜஸ்தான் ராயல்ஸ் அணி கேப்டன் ஸ்மித் டாஸ் வென்று பந்து வீச்சு தேர்வு செய்துள்ளார்.

கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி விவரம்:-

1. கிறிஸ் லின், 2. சுனில் நரைன், 3. ஷுப்மான் கில், 4. நிதிஷ் ராணா, 5. தினேஷ் கார்த்திக், 6. ரிங்கு சிங், 7. அந்த்ரே ரஸல், 8. பிராத்வைட், 9. பியூஸ் சாவ்லா, 10. யார்ரா பிரித்விராஜ், 11. பிரசித் கிருஷ்ணா.

ராஜஸ்தான் ராயல்ஸ் அணி விவரம்:-

1. ரகானே, 2. சஞ்சு சாம்சன், 3. ஸ்மித், 4. பென் ஸ்டோக்ஸ், 5. ரியான் பராக், 6. ஸ்டூவர்ட் பின்னி, 7. ஷ்ரேயாஸ் கோபால், 8. ஆர்சர், 9. உனத்கட், 10. ஒஷசானே தாமஸ், 11. வருண் அருண்.

முதலில் பேட்டிங் செய்த கொல்கத்தா அணியில் லின், சுப்மன் கில் தொடக்க வீரர்களாக களமிறங்கினர். முதல் ஓவரை ஆரோன் வீசினர். முதல் 3 பந்துகளை சந்தித்த லின் ரன் ஏதும் எடுக்காமல் டக் அவுட் ஆனார். முதல் ஓவரில் லெக் பைஸ் முறையில் மட்டும் 4 ரன்கள் எடுக்கப்பட்டது. 5 ஓவர்கள் முடிவில் கொல்கத்தா அணி 2 விக்கெட் இழப்புக்கு 31 ரன் எடுத்தது. சுப்மன் கில் 14 ரன்னில் ஆரோன் பந்துவீச்சில் ஆட்டமிழந்தார்.

இந்த ஐபிஎல் தொடரில் கொல்கத்தா அணி 10 போட்டிகளில் விளையாடி 4ல் வெற்றியும், 6ல் தோல்வியும் அடைந்துள்ளது. தொடர்ச்சியாக 5 போட்டிகளில் தோல்வியை சந்தித்துள்ளது. அதேபோல், ராஜஸ்தான் அணி 10 போட்டிகளில் விளையாடி 3ல் மட்டும் வெற்றி பெற்றுள்ளது. அதனால், இரு அணிகளுக்கும் இது முக்கியத்துவம் வாய்ந்த போட்டியாக கருதப்படுகிறது.

இன்றைய போட்டிக்கான கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியில் கரியப்பா நீக்கப்பட்டு அவருக்கு பதிலாக பிரசீத் கிருஷ்ணா மீண்டும் அணியில் இடம்பிடித்துள்ளார், அதே போல் கர்னேவிற்கு பதிலாக கார்லஸ் பிராத்வொய்ட் அணியில் இடம்பிடித்துள்ளார்.

அதே போல் ராஜஸ்தான் ராயல்ஸ் அணியில் ஆஸ்டன் டர்னருக்கு பதிலாக ஒஸ்னோ தாமஸ் அறிமுக வீரராக களமிறக்கப்பட்டுள்ளார், தவால் குல்கர்னேவிற்கு பதிலாக வருண் ஆரோன் அணியில் இடம்பிடித்துள்ளார்.

 

 

 

 

Sathish Kumar:

This website uses cookies.