உலக சாம்பியன் இங்கிலாந்தை கதறவிட்ட கத்துக்குட்டி அணி; அதிர்ச்சியில் ரசிகர்கள்
இங்கிலாந்து அயர்லாந்து இடையேயான முதல் டெஸ்ட் போட்டியில், முதலில் பேட்டிங் செய்த இங்கிலாந்து அணி வெறும் 85 ரன்களுக்கு ஆல் அவுட்டாகி அசிங்கப்பட்டுள்ளது.
இங்கிலாந்து கிரிக்கெட் அணி உலகக் கோப்பையை வென்றதற்கு பிறகு மீண்டும் டெஸ்ட் போட்டியில் இன்று களமிறங்கியுள்ளது. இங்கிலாந்து மற்றும் அயர்லாந்து அணிகளுக்கு எதிராக ஒரு டெஸ்ட் போட்டி கொண்ட தொடர் இன்று தொடங்கியுள்ளது. இந்தப் போட்டி லாட்ஸ் மைதானத்தில் நடைபெற்று வருகிறது. இது நான்கு நாட்கள் மட்டுமே நடைபெறும். இப் போட்டியில் டாஸ் வென்ற இங்கிலாந்து அணி பேட்டிங்கை தேர்வு செய்தது.
இதனையடுத்து முதல் இன்னிங்ஸில் களமிறங்கிய இங்கிலாந்து அணியின் தொடக்க ஆட்டக்காரர்கள் பெர்ன்ஸ்(6) மற்றும் ராய்(5) ஆகியோர் சொர்ப ரன்களில் அவுட் ஆகினர். இதனைத் தொடர்ந்து டென்லி(23) சற்று தாக்குப் பிடித்தார். எனினும் மறுமுனையில் கேப்டன் ரூட் 2 ரன்களுடனும், பெரிஸ்டோவ் ரன் எதுவும் எடுக்காமலும் வெளியேறினர். இவர்களை தொடர்ந்து மோயின் அலி மற்றும் கிறிஸ் வோக்ஸ் ஆகிய இருவரும் ரன் எதுவும் எடுக்காமல் வெளியேறினர்.
இங்கிலாந்து அணி 23.4 ஓவர்களில் 10 விக்கெட் இழந்து 85 ரன்கள் எடுத்து முதல் இன்னிங்கிஸில் தடுமாறியது.
உலக சாம்பியனான இங்கிலாந்து அணி கத்துக்குட்டி அயர்லாந்து அணியிடம் தடுமாறியது கிரிக்கெட் உலகில் மிகப்பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.